யேகோவா யீரே #2 Grass Valley, California, USA 62-0706 1நன்றி, சகோதரன் ராய். நாம் ஜெபிக்கும் போது சற்று நேரம் நின்ற வண்ணமாக இருப்போம். உங்களுக்கு விருப்பமானால், நாம் தலை வணங்குவோம். இன்றிரவு தேவன் பதிலுரைக்க வேண்டுமென்று நீங்கள் வாஞ்சிக்கும் ஏதாவதொன்று உங்கள் இருதயத்தில் இருக்குமானால் - ஏதாவதொரு விண்ணப்பம் - உங்கள் கைகளையுயர்த்தி, “தேவனுக்கு முன்னால் எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு'' என்று கூறி, அதை தெரியப்படுத்துங்கள். நாம் ஜெபம் செய்யும் போது தலை வணங்குவோம். 2எங்கள் பரலோக பிதாவே, உம்மிடம் வருவதை நாங்கள் ஒரு பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறோம், நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வரும் போது, நாங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அதை பெற்றுக் கொள்வோம் என்றும் அறிந்திருக்கிறோம். நாங்கள் இப்பொழுது நியாசனத்துக்கு முன்பாக வரவில்லை, அங்கு வருவதற்கு நாங்கள் நிச்சயம் விரும்பமாட்டோம், ஆனால் நாங்கள்... கிருபாசனத்துக்கு முன்பாக வருகிறோம். அங்கு எங்கள் வேண்டுகோள்கள் அருளப்படும் என்பதை நிச்சயமாக அறிந்திருக்கிறோம். ஏனெனில் எங்களால் உமது நியாயத்தீர்ப்புக்கு முன்னால் நிற்கமுடியாது. உமது நீதியினாலும் நாங்கள் வாழ முடியாது. உமது இரக்கத்தையே நாங்கள் மன்றாடுகிறோம். கர்த்தாவே, எங்கள் பாவங்களை நீர் எங்களுக்கு மன்னித்தருளும். அதை அருள வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு நீர் எங்களோடு கூட இருந்து, கைகளையுயர்த்தி தெரிவிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் உத்தரவு அருள் வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். அந்த கையின் கீழுள்ள இருதயத்தில் என்ன உள்ளதென்று நீர் அறிவீர். தேவனே, அது வியாதிக்காகவோ, இரட்சிப்புக்காகவோ, அல்லது அன்பார்ந்தவர்களுக்கோ என்பதில் ஐயமில்லை. பிதாவே, இன்றிரவு அவர்களுடைய விண்ணப்பங்களை அருள வேண்டுமென்று அவர்களுக்காக விசேஷமாக ஜெபிக்கிறோம். 3உமது விசுவாசமுள்ள ஊழியக்காரனாகிய ஆபிரகாமைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், இன்றிரவு அவனுடைய பயணத்திலும் அவனுடன் கூட தொடரப் போகின்றோம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாதையில் உமது வார்த்தையை நம்பின உமது விசுவாசமுள்ள ஊழியக்காரனுடன் நாங்கள் செல்லும் போது எங்களை ஆசீர்வதித்தருள வேண்டுமாய் ஜெபிக்கிறோம். பவுல் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில், ஆபிரகாம் ஒரு உதாரணமாகத் திகழ்ந்தான் என்று கூறினது போன்று, அது எங்களுக்கு உதாரணமாய் இருப்பதாக. அவனுக்கிருந்த விசுவாசம் இன்றிரவு எங்களுக்கு வெளிப்பட வேண்டுமென்று ஜெபிக்கிறோம். நாங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கவும், அதில் ஒரு வார்த்தையும் கூட சந்தேகிக்காமலிருக்கவும், அது அனைத்தையும் விசுவாசிக்கவும், அவர் கூறின எல்லாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கவும் அருள்புரியும். அவர் எங்களுக்கு அளித்துள்ள வாக்குத்தத்தங்களை நாங்கள் இறுகப் பற்றிக் கொண்டு, நாங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பதன் மூலம் ஆபிரகாமின் பிள்ளைகளாகும்படி அருள் செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (உட்காருங்கள்). 4சகோ. பார்டர்ஸ் என்னை விட சற்று உயரமானவர், எனவே நான் ஒலிபெருக்கியை சிறிது தூரம் வைக்க வேண்டியதாயுள்ளது. மறுபடியுமாக இன்றிரவு இக்கூட்டத்துக்கு வந்து, வியாதியஸ்தருக்கு ஜெபிக்கவும், பரிசுத்த ஆவி செய்யக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்வதும் சிலாக்கியமே. இதை நான் பாராட்டுதலாகக் கூற விரும்புகிறேன். நான் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா நாடுகளில் மேற்கொண்ட பயணங்களில், நேற்றிரவு நான் கண்ட ஒன்று, சக்கர நாற்காலிகள் காலியாதல், கக்கதண்டங்களை கீழே வைத்தல், குருடர் பார்வையடைதல், செவிடர் கேட்டல், ஊமையர் பேசுதல், மரித்தோர் உயிரோடெழுதல், ''இந்த நபர் மரித்துவிட்டார், இப்பொழுது உயிரோடெழுந்துவிட்டார் என்னும் வாக்குமூலத்தில் கையொப்பமிடுதல், ஆகிய அனைத்தைக் காட்டிலும் என்னை அதிகம் மெய்சிலிர்க்க வைத்தது. நான் கூறின இவையனைத்துமே மெய்சிலிர்க்க வைப்பவைதாம். இருப்பினும் நேற்றிரவு சபையின் அங்கத்தினர்களாகிய இவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, மற்ற ஜனங்களின் மத்தியில் நின்று, தாங்கள் தவறென்று அறிக்கை செய்து, சரியானதை செய்ய விருப்பம் தெரிவித்தபோது, எனக்குத் தெரிந்த வரையிலும் அதுவே மிகச் சிறந்தது. 5ஒருக்கால் சபை மணவாட்டி - தெரிந்து கொள்ளப்பட்டு முடிந்திருக்கும். அவளை இப்பொழுது ஆயத்தப்படுத்த வேண்டும். அவளை.... எழுப்புதல் முடிந்துவிட்டது. அதை நாமறிவோம். வேறு எழுப்புதல் ஆவி இனிமேல் இருக்காது. ஆராதனை இரண்டு மணி நேரம் நீடித்தால், எல்லோரும் குறை கூறுகின்றனர். எழுப்புதல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் நடந்துகொண்டிருக்கும் ஒன்று, அது முடிந்து போவதில்லை. இப்பொழுதோ எழுப்புதல் முடிந்துவிட்டது. எனவே இப்பொழுது நாம் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். ஆபிரகாம் குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிக்குமளவும் அரும்பாடுபட வேண்டியதாயிருந்தது. அவன் குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடித்தவுடனே, அடுத்த படியாக, அவள் மணவாளனை சந்திக்க அவளை ஆயத்தப்படுத்தினான். அதுதான் அவன் அடுத்ததாக புரிந்த செயல். அவன் எப்பொழுது அவளைக் கண்டுபிடித்தான் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? சாயங்கால வேளையில், சாயங்கால வெளிச்சத்தில். நேற்றிரவு ஸ்திரீகள் மனிதர்கள் இருவரையும் தாக்கின போது, அவர்கள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து, எழுந்து நின்று, தாங்கள் தவறென்று ஒப்புக்கொண்டு, தேவனுடைய மன்னிப்பை (God's forgiveness) வேண்டி, முன் செல்ல பிரியம் கொண்டனர். எழுப்புதல் உண்டாவதற்கு இதுவே இடம். எனக்கு தெரிந்த வரைக்கும் எழுப்புதல் எங்காவது உண்டானால், அது உத்தம இருதயங்கள் உள்ள இந்த இடத்தில்தான் உண்டாகும். ஏன்? கிரியை செய்ய ஏதாவதொன்று இங்குள்ளது, பாருங்கள். ஏதாவதொன்று. அவர்களில் பெரும்பாலோர் கர்வம் கொண்டவர்களாகிவிடுவார்கள். அதைக் குறித்து நீங்கள் கூறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஞாபகம் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட வித்து ஸ்தாபன வித்து. அது ஆபிரகாமின் வித்தல்ல. ஆபிரகாமின் வித்து அல்லது சந்ததி வார்த்தையை கண்டு கொண்டு, அதை வேகமாக விசுவாசிக்கும். 6அன்றிரவு நாம் கண்ட கிணற்றடியில் இருந்த வேசி, கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீ... இயேசு தமது மேசியாவின் அடையாளத்தைக் காண்பித்துக் கொண்டிருந்ததை, ஆசாரியர்களும் ரபீக்களும் சூழ நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அது வேதப் பிரகாரமான ஒரு அடையாளம். ஆனால் அவர்களோ, “இவன் பெயல்செபூல், பிசாசு, குறி சொல்லுகிறவன்'' என்றனர். ஆனால் அந்த ஸ்திரீ என்ன செய்தாளென்று இயேசு அவளிடம் கூறினபோது, அந்த வெளிச்சம் அவள் மேல்பட்டவுடனே, அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் வரும் போது இவைகளை நமக்கு அறிவிப்பார்'' என்றாள். பாருங்கள். முன் குறிக்கப்பட்ட அந்த வித்து விரைவில் அதை கிரகித்துக் கொண்டது. ஏனெனில் அது ஆபிரகாமின் சந்ததி, உண்மையாக. அவள் அந்த வெளிச்சத்தைக் கண்டாள், அது வார்த்தை. மேசியா வரும்போது இவைகளை செய்வாரென்று வார்த்தை வாக்களித்திருந்தது. அவள் அதை அடையாளம் கண்டுக் கொண்டாள். இயேசு, ''உன்னுடன் பேசுகிற நானே அவர்“ என்றார். அவள் ஊருக்குள் போய் மற்றவர்களை நம்பச் செய்ய முயன்றாள். அவள், ''நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள். இவர் மேசியா அல்லவா?'' என்றாள். பாருங்கள்? 7இப்பொழுது நமது சகோதரிகளுக்கு ஒரு வார்த்தை. நான் ஸ்திரீகளை வெறுப்பவன் என்று எப்பொழுதுமே கருதப்படுகிறவன். நான் அப்படியல்ல. பாருங்கள்? நான் சிறு பையனாயிருந்தபோது, எனக்கு கசப்பான அனுபவம் உண்டாயிருந்தது. ஆனால் நான் எப்பொழுதுமே சீரியப் பண்புகள் கொண்டுள்ள ஸ்தீரிக்கு அதிக மதிப்பு கொடுப்பவன். ஆனால் அவ்வாறு பாவனை செய்யும் யாரையும் நான் மதிப்பதில்லை. ஒரு உண்மையான நற்பண்பு கொண்ட ஸ்திரீயைக் காண்பது எனக்குப் பிரியம். அவள் ஒரு முத்து. இந்நாளில் ஸ்திரீகள் தாறுமாறான நிலையில் உள்ளனர். இந்த கடைசி நாட்களில் மிகவும் தாறுமாறான நிலையில் உள்ளனர். வேதம் அவ்வாறு கூறுகின்றது. ஏன்? காலம் முடிவடையப் போகின்றது. முதலாவதாக யார் தாறுமாறடைந்தது என்பது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? ஒரு ஸ்திரீ. அது உண்மை. கடைசி நாட்களில்... இப்படி முன்பு இருந்ததில்லை. ஆறாயிரம் ஆண்டுகளாக பெண்கள் பெண்களாகவே இருந்து வந்தனர். இப்பொழுதோ அவர்கள் ஆண்களைப் போல நடக்க முயன்று, ஆண்களின் உடைகளை அணிந்து, ஆண்களைப் போல் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கின்றனர். வேறெந்தக் காலத்திலும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, கடைசி நாட்களில் இவர்கள் இப்படி செய்வார்கள் என்று வேதம் முன்னுரைக்கிறது. அதை இப்பொழுது நீங்கள் காண்கிறீர்கள் - ஸ்திரீகளின் நிலைகுலைந்த நிலைமை. வேதம், ''தப்பினவர்கள் சீயோன் மலையிலிருந்து புறப்படுவார்கள்'' என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. பாருங்கள், அவர்கள் எப்படி தப்புவார்களென்றும்!. 8நீங்கள், “அதனால் ஒரு வித்தியாசமுமில்லை'' எனலாம். அதனால் வித்தியாசம் உண்டு. அண்மையில் ஒருவர் என்னிடம், ”சகோ. பிரன்ஹாமே, இந்த சிறு காரியம் எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது'' என்றார். நான், “பவுலுக்கு அது வித்தியாசத்தை உண்டு பண்ணினது - பவுல், பரலோகத்திலிருந்து வருகிற தூதன் வேறெதையாவது கற்பித்தால், அவன் சபிக்கப்பட்டவன்'' என்று கூறியுள்ளான். அது போதகராயிருந்தாலும், தூதனாயிருந்தாலும், பேராயராயிருந்தாலும், போப்பாண்டவராயிருந்தாலும், யாராயிருந்தாலும் இதற்கு முரணான ஒன்றை போதித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கடவன்'' என்றான். பாருங்கள், அது முற்றிலும் உண்மை. நீங்கள் படிக்க விரும்பினால், அது கலாத்தியர் 1: 8. அவர், ''நான் நினைக்கவில்லை... குட்டை தலைமயிர் உள்ள பெண்கள் சாந்த குணமும், இனிய குணமும் உள்ளவர்களாக நான் கண்டிருக்கிறேன்“ என்றார். நான், “அது முற்றிலும் உண்மை. நானும் கண்டிருக்கிறேன். ஆனால் அதுவல்ல. வேதம் என்ன கூறுகிறதோ அதை பின்பற்ற வேண்டும்'' என்றேன். தேவன் மோசேயிடம், “உன் பாதரட்சைகளை கழற்றிப் போடு'' என்று கூறினபோது, அவன், ”கர்த்தாவே, அதற்கு பதிலாக என் தொப்பியை கழற்றிவிடுகிறேன்'' என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும். பாருங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் கூறுகிறாரோ, அதை செய்ய வேண்டும். ஆனால் தொல்லை என்னவெனில், நான் நினைப்பது என்னவெனில், என்னை வருந்தச் செய்வது என்னவெனில், போதகர்கள் அப்படிப்பட்ட ஒன்றை பொறுத்துக் கொள்கின்றனர். அது என்ன? நவீன ஆதாம் தன் மனைவியுடன் செல்வதை அது காண்பிக்கின்றது. பாருங்கள்? தேவனுக்கு வார்த்தையிலும் அவரிலும் நிற்கும் வேறொரு ஆதாம் - வார்த்தையில் மாத்திரம் நிற்பவன் - வேண்டும். என்னவானாலும், வார்த்தையே சரி. வேறெந்த வழியிலும் செல்லாதீர்கள். 9இந்த ஆறாயிரம் ஆண்டுகளில், வேறெந்தக் காலத்திலும் பெண்கள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளவும், ஆண்களைப் போல் உடுத்திக்கொள்ளவும் நிலைக்குலைந்தவராய் இருக்கவும் விரும்பினதில்லை. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். தீர்க்கதரிசனம் அறிந்தவர் யாருமே ஒரு ஸ்திரீஅமெரிக்காவுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள் என்பதை அறிவர். இது “பெண்களின் சுதந்தரம்'' என்றழைக்கப்படுகிறது. எதற்கு சுதந்தரம்? அவள் விருப்பம் போல் பாவம் செய்ய. ஒரு ஸ்திரீ தான் விரும்பினதைச் செய்ய முடியாது. வேதம் அவ்வாறு கூறுகின்றது. ஸ்திரீ மனிதனின் உப - பொருள் (by product). அவள் மூல சிருஷ்டிப்பில் இடம் பெறவில்லை. அது முற்றிலும் உண்மை. அவள் மனிதனிலிருந்து வெளியே எடுக்கப்பட்டவள். துவக்கத்தில் மனிதன் ஆணும் பெண்ணுமாக இருந்தான், அவர் பெண்ணின் ஆவியை எடுத்து அவனுடைய விலா எலும்புகளில் ஒரு விலா எலும்பில் வைத்தார். கவனியுங்கள்! ரெபெக்காள் ஈசாக்கை சந்திக்க சென்ற போது, அவனைக் கண்ட மாத்திரத்தில் ஒட்டகத்திலிருந்து கீழே குதித்து தன் முகத்தை முக்காடிட்டுக் கொண்டாள் என்பதை கவனித்தீர்களா? ஏன்? அவள் தன் தலையிடம் வந்துக் கொண்டிருந்தாள், கிறிஸ்துவே வார்த்தை. அவரே தலை. அவர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். அதை எப்படியாயினும் அவர்கள் செய்ய வேண்டும். ஒரு பெண்ணிற்கு திருமணமாகும் போது அவளை கவனித்திருக்கிறீர்களா? அவள் தன் முகத்தின் மீது ஒரு முக்காடை போட்டிக்கிறாள்? ஏன்? அவள் தன் தலையிடம் வருகிறாள். ஆகவே மணவாட்டியாயிருக்கின்ற சபை, சபை, எந்த ஒரு கோட்பாட்டிற்கும் தன்னை மூடிக்கொள்ள வேண்டும்; அவள் தன் தலையாகிய வார்த்தையிடம் வருகிறாள். கிறிஸ்து தான் வார்த்தை, அவர் தான் அந்த தலை. பாருங்கள்? 10இப்பொழுது நண்பர்களே, இதைத் தொடர்ந்து பேச எனக்கு விருப்பமில்லை, வேதத்தின் ஆழமான போதகங்களையொட்டிய ஐந்நூறுக்கும் அதிகமான வேத வாக்கியங்களை இன்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த கூட்டத்தில் ஆபிரகாமில் மாத்திரம் நிலை கொள்ள விரும்புகிறேன். சகோதரருக்கு ஆட்சேபனையில்லை என்றால், எல்லோரும் விரும்பினால், நான் திரும்ப வந்து ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த எனக்குப் பிரியம், அப்பொழுது நாம் சற்று நேரம் ஆழ்ந்த கருத்துக்குச் சென்று அவைகளைப் பார்க்கலாம். கர்த்தர் அதை வாய்க்கச் செய்வாரென நம்புகிறேன் (சபையோர் கைதட்டுகின்றனர் - ஆசி). உங்களுக்கு என் நன்றி. ஆம். நன்றி, நன்றி. இங்கு மீன்கள் உள்ளன என்று நானறிவேன். எனக்குத் தெரியும். மீன் பிடிக்க எனக்கு மிகவும் பிரியம். இங்கு உத்தமமான ஒருவருடன் பணிபுரிய போதிய பொருட்கள் உள்ளன. எவருமே தவறாயிருக்க வாய்ப்புண்டு. உங்களுக்கு தெரியாது. நான் தினந்தோறும் என் தவறுகளினின்று மரித்து, கிறிஸ்துவுக்கு முன்பாக வாழப் பிரயாசப்பட்டு வருகிறேன். தேவனுடைய ஆவியை போதிய அளவில் கொண்டிருந்து, நடந்து வந்து, தாங்கள் தவறென்று ஒப்புக்கொண்டு, “நான் சரியான காரியத்தையே விரும்புகிறேன்'' என்று கூறும் அளவிற்கு எவராகிலும் பெரியவர்களாக இருப்பார்களானால், அங்கேயே எனக்கு அதிகம் நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில் அதுவே உண்மையில் ஆபிரகாமின் சந்ததி. அவர்கள் அதை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் கேட்காமல் அதை அறிந்துக் கொள்ள இயலாது. அவர்கள் அதை முதலில் கேட்க வேண்டும். ''நாம் எப்படி... ஒரு போதகரில்லாமல்? தேவன் ஒரு போதகரை அனுப்பாமல் அவர் எப்படி பிரசங்கிக்க முடியும்?'' அது முற்றிலும் உண்மை. 11இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது நாம் ஆபிரகாமுக்கு திரும்பிச் செல்கிறோம். நாம், அவனிடம் திரும்பிச் சென்று அவனைக் குறித்து பேசுவது நலம். நான் பேசுவது தெளிவாகக் கேட்கிறதா, மாடியின் முன் பாகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம்? இன்றிரவு இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தைக் காண்பது நன்றாயுள்ளது. இங்குள்ள நீங்கள் மிகவும் அருமையானவர்கள். நான் நிச்சயம்... இன்று கனடாவிலிருந்து வந்துள்ள ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். தேவன் என்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நடத்திச் சென்றார், அங்கு ஒன்று நடைபெற நான் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. அங்கு நின்று கொண்டு... இந்த நண்பரை நான் சந்தித்தேன். அவர் அமெரிக்க மக்கள் எவ்வளவு நட்புத் தன்மை கொண்டுள்ளனர் என்று என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். நான், ''ஆம், மிகவும் பொல்லாங்கான இந்த இடத்திலும் அதைச் சுற்றிலும் சில முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்துக்கள் உள்ளன என்றேன். இங்குள்ள உங்கள் நகரத்தை மாத்திரம் நான் குறிப்பிடவில்லை. என்னுடைய நகரமும் உங்கள் நகரத்துக்கு இணையாக பொல்லாங்காயுள்ளது. முழு உலகமும் பொல்லாங்கால் நிறைந்துள்ளது. ஆனால் குப்பை அனைத்தும் மிதந்து மேற்கே வந்துவிட்டது. நாகரீகமும் அதனுடன் பயணம் செய்ததென்று நாமறிவோம். நாகரீகம் எங்குள்ளதோ, அங்கு பாவம் உள்ளது. அது உண்மை. இங்கு மேலேயும் கீழேயும் பாருங்கள். இது பிரசங்கியின் கல்லறைத் தோட்டம். அது உண்மை. லாஸ் ஏஞ்சல்ஸை பாருங்கள். எல்லாமே, எல்லா கொள்கைகளுமே இங்கு தான் வந்து அடைகின்றன. ஒவ்வொருவரும் ஒரு கோட்பாட்டை ஒரு உபதேசத்தை பெற்றுள்ளனர். அங்கு வார்த்தையைக் கொண்டு செல்ல உங்களால் முடியாது. அது மிகவும் மாசுபட்டுள்ளது. அது உண்மை. பிசாசுகள், அது சாத்தானின் இருப்பிடம். இருப்பினும் அவைகளின் மத்தியில், அங்கு சில வித்துக்களும் உள்ளன. நீங்கள் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று வெளிச்சத்தை சிதறச் செய்வதே. அந்த வெளிச்சத்தில் ஏதாவதொரு பாகம்... அங்கு வித்து இருக்குமானால், அந்த வெளிச்சம் பட்டவுடனே அது உயிர் பெறும். நீங்கள் வெளிச்சத்தை விதைக்கவேண்டும், அவ்வளவுதான். அவரே சாயங்கால வெளிச்சமாயிருக்கிறார், அதை நாமறிவோம், அவருடைய வார்த்தை. 12நேற்றிரவு நாம் ஆபிரகாமை விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டோம். நான் 22ம் அதிகாரத்தின் பேரில் துவங்கினேன், ஆனால் அதை முடிக்கவில்லை. ஏனெனில் ஆபிரகாம் துவக்கத்தில் எப்படியிருந்தான் என்று ஆதாரப்படுத்திக் காண்பித்தேன். நேற்றிரவு நாம் தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் இடம் வரைக்கும் வந்து அவனை அங்கு விட்டு சென்றுவிட்டோம். ஓ, அது எனக்கு மிகவும் பிரியம் - ஆபிரகாமுடன் உடன்படிக்கை பண்ணும் விதம். அவர் ஆபிரகாமைக் கூப்பிட்டு அவனுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்தப் போவதை நாம் பார்த்தோம். அவர் அவனிடம் மூன்று வயதுள்ள மிருகங்கள் மூன்றினை கொண்டு வந்து அவைகளை நடுவே துண்டிக்கும்படி கூறினார். நமக்கு மூன்று என்னும் எண்ணிக்கை கிடைத்தது. அதை மறுபடியும் பார்க்க இப்பொழுது நமக்கு நேரமில்லை. என்னே, அந்த ஒரு பொருளின் பேரில் நாளை காலை வரைக்கும் நாம் நிலைத்திருந்தாலும், அதை முழுவதும் விவரித்து முடித்திருக்க மாட்டோம். ஆனால் அதன் முக்கியமான அம்சங்களை நாம் பார்த்தோம், மற்றவைகளை பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த நேரத்தில் உங்களுக்கு வெளிப்படுத்தித் தருவாரென்று எதிர்ப்பார்க்கிறேன். 13இப்பொழுது, எப்படி அந்த பரிபூரணம், அந்த பரிபூரண பலி; தேவன் பரிபூரண மனிதராய் தோன்றி என்ன செய்யப் போகின்றார்... நமக்கு தேவனாகிய பிதா இருந்தார். அவர் தாம் சர்வ வல்லமையுள்ள யேகோவா. அவர் ஒளி ஸ்தம்பத்தில் இருந்து கொண்டு, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அதே யேகோவா மாம்சமாகி, அவருடைய ஒரே பேறான குமாரன் என்னும் உருவில், நமது மத்தியில் வாசம் பண்ணினார். அவர் வாசம் பண்ணுவதற்கென தமக்கென்று ஒரு கூடாரத்தை சிருஷ்டித்துக் கொண்டார், தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது - பரிபூரணமாக வெளிப்படுதல். பிறகு, உடன்படிக்கையின் மூலம் அவருடைய மானிட சரீரம் எடுக்கப்பட்டது. அவருடைய சரீரத்தை, உடன்படிக்கையின் காரணமாக தேவன் துண்டித்து, அவர் மரித்தார். நம்முடைய பாவங்கள் போக்கப்பட வேண்டும் என்பதற்காக அவருடைய இரத்தம் சிந்தப்பட்டது. அந்த சரீரத்தை தேவன் எழுப்பி அவருடைய வலது பாரிசத்தில் அதை வீற்றிருக்கச் செய்து, ஆவியை பெந்தெகொஸ்தே நாளன்று மறுபடியும் அனுப்பினார். கிறிஸ்து இயேசுவுக்குள் வாசம் செய்த அதே ஜீவன் இப்பொழுது உடன்படிக்கை மக்களுக்குள் வாசம் செய்து, அதே கிரியைகளை நடப்பிக்க வேண்டும். இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்று யோவான் 14:12ல் கூறினார். அது உண்மையாயிருக்க வேண்டும். அல்லது தவறாயிருக்க வேண்டும். அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! என்னைப் பொறுத்த வரையில், அதன் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே, ஒவ்வொரு வார்த்தையும் பிழையற்றது. தேவன் எவ்வளவு மகிமையாக் கிரியை செய்கிறார் என்பதை கவனியுங்கள். 14அதன் பிறகு பிதாவைச் சேர்ந்தவர்கள். ''நீங்கள் போய், சகல ஜனங்களுக்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று இயேசு கூறினதாக மத்தேயு எழுதி வைத்துள்ளான். பாருங்கள்? இப்பொழுது, பிதா... நமக்கு மூன்று கடவுள்கள் உண்டு என்று அர்த்தமல்ல. நமக்கு மூன்று உத்தியோகங்களை வகிக்கும் ஒரே தேவன் இருக்கிறார் (பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவி). நேற்றும் இன்றும் என்றும் மாறாத அதே தேவன். அது முற்றிலும் உண்மை . அது எவ்வளவு மகிமையாக ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தப்பட்டதென்று கவனியுங்கள். அந்த தேவன் இந்த அக்கினி ஜூவாலையில் எப்படி அந்த துண்டங்களின் நடுவே கடந்து போனாரென்று அவர்கள் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் போது அதை எப்படி எழுதி, இரண்டாகக் கிழிப்பார்களென்றும், அந்த இரண்டு துண்டுகளும் புறாவின் சிறகுகளைப் போல் இணையவேண்டுமென்றும் நாம் நேற்றிரவு பார்த்தோம். அந்த ஒப்பந்தம் புறாவின் சிறகுகளைப் போல் இணைய வேண்டும். 15பாருங்கள், நண்பர்களே, இதைத்தான் நான் கூற முற்படுகிறேன். நமது பெந்தெகொஸ்தே மக்களினிடையேயும் கூட இந்த மானிட ஞானம் என்னும் பிசாசு காணப்பட்டு ஜனங்களை... எனக்கு தேவனுடைய வரங்கள் அனைத்திலும் விசுவாசம் உண்டு. எனக்கு கூச்சலிடுதலில் நம்பிக்கையுண்டு, எனக்கு அந்நிய பாஷைகள் பேசுவதில் நம்பிக்கையுண்டு. தேவன் கூறியுள்ள எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறேன். இருப்பினும் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதன் அத்தாட்சியாக இவைகளின் பேரில் நீங்கள் சார்ந்திருக்க முடியாது. பாருங்கள், உங்கள் வாழ்க்கை அதனுடன் ஒத்துப்போக வேண்டும். உங்கள்... உங்கள் கனிகளினால் நீங்கள் அறியப்படுகின்றீர்கள். பாருங்கள்? இவைதாம் என்னை கவலைக்கிடமாக்குகின்றது. ஏனெனில் என் சொந்த சபை, பெந்தெகொஸ்தே சபை தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு, சத்தியத்தை விட்டுவிலகுகிறதை நான் காண்கிறேன். அவர்களிடம் வார்த்தையின் சத்தியத்தை நாம் கொண்டு வந்தாலும், அவர்கள் புறமுதுகு காண்பித்து சென்றுவிடுகின்றனர். அவர்களிடம், ''என்னுடன் வந்து உட்காருங்கள்'' என்று கூறினாலும், அவர்கள் செய்வதில்லை. பாருங்கள், ஏதோ தவறுள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. அது தான் என்னை கவலையில் ஆழ்த்துகின்றது. என் சபைக்கு விரோதமாய் நான் இருக்கிறேன் என்றல்ல. நான்... 16நான் கிறிஸ்துவில் அன்பு கூர்ந்தால், அவரைக் குறித்து பெருமையாகப் பேசுவதைக் காட்டிலும் அவருடைய சபையைக் குறித்து பெருமையாய் பேசுவது சிறந்ததாயிருக்கும். ஏனெனில் என்னைக் குறித்து நீங்கள் பெருமையாகப் பேசுவதை காட்டிலும் என் பிள்ளைகளைக் குறித்து நீங்கள் பெருமையாகப் பேசுவதையே நான் விரும்புவேன். நான் அடிக்கடி நினைப்பதுண்டு. என்னிடம் இயேசுவின் இரத்தம் இரு துளிகள் ஒரு குப்பியில் இருக்குமானால், அதைக் கீழே சிந்தாதபடிக்கு மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பேன். அதைப் பிடித்துக்கொண்டு நான் மிகவும் கவனமாய் நடப்பேன். ஆனால் இன்றிரவு, அவருடைய பார்வையில் அதைக் காட்டிலும் பெரிதான ஒன்று என்னிடம் உள்ளது. அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டது எனக்குண்டு. பாருங்கள், அவர் உங்களுக்காக தமது இரத்தத்ததை சிந்தினார். இதோ நான் இங்கு இன்றிரவு ஒரு போதராக நின்று கொண்டு உங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய நித்திய இடத்தை சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் எந்த கோட்பாட்டையும் கொள்கையையும் குறிப்பிடப் போவதில்லை. அது வார்த்தையாயிருக்க வேண்டும். அது மாத்திரமே நிலைத்திருக்கும். கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். கிறிஸ்து வார்த்தையாயிருந்தால், வார்த்தையானது நமது மத்தியில் வெளிப்படுத்தப்படுகிறது. பாருங்கள், அது அப்படித்தான் இருக்கவேண்டும். 17எனவே, பழைய ஏற்பாட்டின் தேவன், தமது அனைத்தையும் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் ஊற்றினார் என்று நான் விசுவாசிக்கிறேன். புதிய ஏற்பாட்டின் இயேசு தமது அனைத்தையும், தமது சொந்த இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்ட சபைக்குள் ஊற்றினார். பாருங்கள்? “இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் 'காஸ்மாஸ் (cosmos) அதாவது உலக ஒழுங்கு என்னைக் காணாது', நீங்களோ என்னைக் காண்பீர்கள்” அதாவது சபை. “ஏனெனில் நான் உங்களோடே வாசம் பண்ணி உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களுக்குள்ளே இருப்பேன்”. அப்பொழுது அந்த ஜீவன், அந்த ஒப்பந்தம், கல்வாரியில் கிறிஸ்துவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த ஆவி, ஜனங்களின் மேல், தேவன் வாக்களித்துள்ள ஆபிரகாமின் சந்ததியின் மேல் ஊற்றப்படுகிறது. ஞாபகம் கொள்ளுங்கள், அது அவனுடைய எல்லா சந்ததிகளுக்கும் அல்ல, ஆனால் அந்த சந்ததிக்கு மாத்திரமே. 18முன்குறிக்கப்படுதலைக் குறித்த ஒரு உபதேசம் இப்பொழுது நிலவி வருகின்றது, அது அர்த்தமற்ற, அழுகிப்போன ஒன்று ஆனால் உண்மையான முன்குறிக்கப்படுதல் ஒன்றுண்டு. தேவன் தமது முன்னறிவினால் முன்குறிக்க முடியும். ஏனெனில் அவருக்கு முன்னறியும் தன்மையுண்டு. ஒருவரும் கெட்டு போவது தேவனுடைய சித்தமல்ல. ஆனால் அவர் முடிவற்ற தேவனாயிருப்பதால், யார் யார் கெட்டுப் போவார்கள், யார் யார் கெட்டுப்போக மாட்டார்கள் என்பதை ஆதியிலே அறிந்திருந்தார். அதனால் தான், ஈசாக்கு... இல்லை, யாக்கோபும் ஏசாவும் பிறப்பதற்கு முன்பே, அவர் ஏசாவை வெறுத்தார். யாக்கோபை சிநேகித்தார். ஏசா பின்வாங்குபவன் என்றும், யாக்கோபு சேஷ்ட புத்திரபாகத்தை மதிக்கிறவன் என்றும் அவருடைய முன்னறிவு அவரை அறியச்செய்தது. யாக்கோபு, அவன் சேஷ்டபுத்திர பாகத்தை எவ்வழியில் பெற்றுக் கொண்டாலும் கவலையில்லை; அது அவனுக்கு வேண்டுமென்று விரும்பினான். இருவரும் இரட்டை பிறவிகள், ஒரே பரிசுத்தமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள். ஆனால் ஒருவன் துரோகி, மற்றவன் விசுவாசி. தேவன் தமது முன்னறிவினால் இதை அறிந்திருந்தார். 19தேவன் தமது முன்னறிவினால்... தமது பணியை அவ்வாறு... உங்கள் பணியை நீங்கள் கவலையீனமாக செய்ய மாட்டீர்கள். தேவன் தமது முன்னறிவினால் யாரெல்லாம் இரட்சிக்கப்படுவார்களென்று அறிந்திருந்தார். எனவே அப்படிப்பட்டவர்களை பிடிக்கவே அதாவது யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர் முன்னறிந்தாரோ, அவர்களை - அவர் இயேசுவை அனுப்பினார். நீங்கள் எபேசியர் முதலாம் அதிகாரத்தைப் படித்தால், அதை நீங்கள் காண்பீர்கள். பாருங்கள்? இப்பொழுது, அங்கே. அவர் தமது சுவிஷேத்தை அனுப்பி அதை விதைக்கிறார், அவர் உயிர்பெறச் செய்ய அவர் தமது ஆவியை அனுப்புகிறார். இரண்டுமே ஒரே வயலில் விளைகின்றன. எபிரெயர் 6-ம் அதிகாரம் அதை நமக்குப் போதிக்கிறது. மழை நிலத்தில் அடிக்கடி பெய்கிறதென்று இயேசு கூறினார். அது நிலத்திலுள்ளவைகளை விளையச் செய்கிறது. ஆனால் முள்செடிகளும் முள் பூண்டுகளும் தகாததாயும் புறக்கணிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கின்றன. சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு. பார்த்தீர்களா? அதை ஞாபகம் கொள்ளுங்கள். 20ஒரு கோதுமை வயலை நாம் எடுத்துக் கொள்வோம். இங்குள்ள நீங்கள் கோதுமை பயிரிடுகின்றீர்கள். வறட்சி உண்டாகிறதென்று வைத்துக்கொள்வோம். இங்கு நீங்கள் அறிந்த சில களைகள் வயலில் விளைந்துள்ளன, முட்கள் விளைந்துள்ளன. வயலில் கோதுமையும் விளைந்துள்ளது. இரண்டுமே தாகமாயுள்ளன. மழை களைகளுக்காக பெய்யவில்லை, கோதுமைக்காக பெய்கிறது. ஆனால் மழை பெய்யும் போது, கோதுமை எவ்வளவாக களிகூருகின்றதோ, அவ்வளவாக அந்த களையும் களிகூருகின்றது. ஆனால் அவைகளுடைய கனிகளினால் நீங்கள் அறிவீர்கள். அதே ஆவி மாய்மாலக்காரனின் மேல் விழுகின்றது. அவன் மற்றவர்களைப் போலவே கூச்சலிடுகிறான். ஆனால் அவன் வாழ்க்கை அவன் யாரென்பதை நிரூபிக்கிறது. பாருங்கள்? நாம் உணர்ச்சியின் மேல் அதிகமாக சார்ந்துள்ளோம். இன்று வயல் எல்லா வகையான உணர்ச்சிகளினாலும் - வேத ஆதாரமற்ற உணர்ச்சிகளினாலும் - மற்றவைகளினாலும் நிறைந்துள்ளது. நிச்சயமாக. ஆனால் நாமோ வார்த்தைக்கு - வார்த்தையின் சத்தியத்துக்கு - திரும்பி வர வேண்டும்; வார்த்தை என்ன கூறுகிறதோ, அதற்கு. 21தேவன் ஆபிரகாமிடம், அவன் மூலமாய், மூன்றாம் உடன்படிக்கை, ஒரே உடன்படிக்கை. இயேசு ஒருவர் மாத்திரமே தேவன். ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையின் உறுதிப்படுதலாக அமைந்துள்ளார், ராஜரீக சந்ததி, ஆவியின் சந்ததி. விலையேறப்பெற்ற கத்தோலிக்க நண்பர்களாகிய உங்களுக்கு இதைக் கூறுகிறேன். நீங்கள், ''தேவனுடைய தாயாகிய மரியாளே வாழ்க'' என்று கூறும் போது, உங்களுக்கு வெட்கமில்லையா? மரியாள் எப்படி தேவனுடைய தாயாக இருக்க முடியும்? அவள் இருக்க முடியாது. நீங்கள் கூறலாம். நான் அன்றொரு நாள் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கருத்து வேற்றுமைக் கொண்டவர். அவர் இயேசு மரியாளின் வித்து என்று கூறினார். அவர் மரியாளின் வித்தாயிருப்பாரானால், அந்தக் குழாயின் வழியாய் வித்து வருவதற்கு முன்பு, அதை தோன்றச் செய்ய இனச்சேர்க்கை உணர்ச்சி உண்டாயிருக்க வேண்டும். அப்படியானால் நீங்கள் யேகோவாவை... நீங்கள் அவர் அதை செய்ததாக கருதுகிறீர்கள் என்று பார்த்தீர்களா? சிருஷ்டி கர்த்தராகிய தேவன் முட்டை, இரத்த அணு இவ்விரண்டையும் சிருஷ்டித்து, ஒரு மாம்ச கூடாரத்தைத் தோன்றச் செய்தார். அதில் மனிதனுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அது தேவன் மாத்திரமே! அது உண்மை. மரியாள் நல்லவள், நிச்சயமாக. இன்றிரவு பல நல்ல பெண்கள் இங்கு அமர்ந்துள்ளனர். தேவன் ஏதாவதொன்றை உபயோகித்து முடித்துவிட்டால், அது காட்சியை விட்டு விலகி விடுகின்றது. மரியாள் ஒரு மத்தியஸ்தர் அல்ல, அவள் தேவனுடைய தாய் அல்ல. அவள் மகிமையில் உள்ள நல்லவள், மகிமையில் பரிசுத்தவாட்டி, ஏனெனில் அவள் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினாள், இங்குள்ள ஒவ்வொரு ஸ்திரீக்கும் தேவனை சேவிக்க அது போன்ற ஒரு தருணம் அளிக்கப்பட்டுள்ளது - அதே விதமாக அல்ல. பாருங்கள்? தேவன் உன்னை உபயோகிப்பார். 22இயேசு தோன்றுவதற்கென அவளை ஒரு கருவியாக மாத்திரம் உபயோகித்தார். ஆனால் அந்தப் பிள்ளை தேவனுக்கே சொந்தமானது. ஆம், அவர் முட்டை, ஹீமோக்ளோபின் இவ்விரண்டையும் சிருஷ்டித்தார். ஹீமோக்ளோபின் ஆண் இனத்திலிருந்து மாத்திரமே வர முடியும். அவர் அதை சிருஷ்டித்தார். மரியாள் எவ்வித பாலுணர்ச்சியுமின்றி இந்த குழந்தையை கருத்தரித்தாள். பரிசுத்த ஆவி அவளை நிழலிட்டு அவளுடைய கர்ப்பத்தில் இந்த இரத்த அணுவையும் முட்டையையும் சிருஷ்டித்து, அது கிறிஸ்து இயேசு என்னும் மனிதனைத் தோன்றச் செய்ததேயன்றி வேறெல்ல. தேவன் எழுதிக்கொண்டிருந்த உடன்படிக்கை அதுவே, அதாவது தேவன் நமது மத்தியில் மனிதனாக தோன்றின போது அவர் துண்டிக்கப்பட்டார். பாருங்கள், மூன்று வயதுள்ள மூன்று துண்டிக்கப்பட்டன. தேவன் ஒரு பாகத்தைத் தம்முடன் வீட்டுக்குக் கொண்டு சென்று, மற்ற பாகத்தை இங்கு கீழ் அனுப்பினார். சரீரம் அதை சந்திக்கும் போது, அந்த சரீரத்தை எந்த ஜீவன் ஆட்கொண்டதோ, அதே ஜீவன் இந்த சரீரத்தை ஆட்கொள்ள வேண்டும். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தையாயிருக்கிறார் பாருங்கள்? அன்று வார்த்தை செய்த அதே கிரியைகளை இன்றும் செய்து வருகிறது. அவர் வார்த்தையாயிருக்கிறார் - நித்திய வார்த்தை தேவனுடைய வார்த்தை நித்தியமாயுள்ளது. சரி 23அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஒரு வழியை உண்டாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய மாம்சப் பிரகாரமான சந்ததியாகிய இஸ்ரவேலர் அவரை புறக்கணிப்பார்கள் என்று அறிந்திருந்தார். ஆனால் ராஜரீக சந்ததியோ அது சாராளுடன் இன சேர்க்கையின் மூலம் தோன்றின சந்ததியல்ல. ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசம் கிறிஸ்துவை தோன்றச் செய்தது. அதுவே சகல ஜாதிகளின் ராஜரீக சந்ததி; சகல ஜாதிகளிலிருந்தும் மணவாட்டி வந்து ஒன்று சேருவாள். ஆபிரகாம் சகல ஜாதிகளுக்கும் தகப்பன். அவன் தன் மனைவியாகிய சாராளுடன் வாழ்ந்து மகனைத் தோன்றச் செய்ததினால் அல்ல, ஆனால் அவன் வார்த்தையை விசுவாசித்ததினால் அப்படி ஆனான். ஆமென், அதுதான். 24இப்பொழுது நாம் காண்கிறோம். இந்த மகத்தான அனுபவத்துக்குப் பிறகு இப்பொழுது நாம் 17ம் அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம். கூடுமானால், 22ம் அதிகாரத்துக்கும் செல்ல முயல்வோம். 17ம் அதிகாரம் ஆபிரகாமுடன் செய்து கொண்டிருக்கும் பயணம் உங்களுக்கு பிரியமா? அதை கூர்ந்து கவனிக்க எனக்கு பிரியம். ஏன் தெரியுமா? அவன் செய்த ஒவ்வொன்றும் சபைக்கு பரிபூரண முன்னடையாளமாயுள்ளது. அதை நீங்கள் நம்புகிறீர்களா? கவனியுங்கள். வேத வாக்கியங்கள் அனைத்துமே அதற்கு முன்னடையாளமாயுள்ளன. யோவேலைப் பாருங்கள். அவன், ''கடைசி நாட்களில் தேவன் தமது ஆவியை ஊற்றுவார் என்றான். எப்படி ஒரு பச்சைப் புழு தோன்றி அவருடைய சபையை தின்றுபோடும் என்று! ''பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது: வெட்டுக்கிளி விட்டதை முசுக்கட்டைப் பூச்சு தின்றது. ''அது நான்கு வெவ்வேறு கட்டங்களில் வளரும் ஒரே புழுதான். ஒவ்வொன்றும் ஒரு பாகத்தை தின்றுவிட்டது. இதோ பச்சைப் புழு வந்து பட்டையை தின்று போட்டது, மற்றது வந்து கனியைத் தின்று போட்டது, பின்பு மற்றவை தோன்றி மரத்திலுள்ள சத்தை உறிஞ்சிவிட்டன. அது எப்பொழுதென்றால்... 25கிறிஸ்து தான் ஏதேன் தோட்டத்திலுள்ள அந்த மரம்! ஏதேன் தோட்டத்தில் இரண்டு மரங்கள் இருந்தன. இவ்விரு மரங்களும் பிறப்பின் நோக்கத்துக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன. ஏவாள், அவள் மரணத்தின் விருட்சம், அவள் தொடப்பட்டாள். கிறிஸ்து ஜீவ விருட்சம். ஸ்திரீயின் மூலம் மரணம் தோன்றினது. இயேசு என்னும் அந்த மனிதரின் மூலம் ஜீவன் வருகின்றது. அவர் அங்கு நின்று யூதர்களுடன் பேசினபோது, அவர், ''நான்... நீங்கள்...“ என்றார். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவை நாற்பது ஆண்டுகளாக புசித்தார்கள்'' என்றனர். அவர், ''ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள். ஆனால் நானோ வானத்திலிருந்து பிதாவினிடமிருந்து இறங்கின ஜீவ அப்பம், ஜீவ விருட்சம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் மரியாமல் இருப்பான்'' என்றார். 26அந்த விருட்சத்தை யாரும் தொடாதபடிக்கு தேவன் சேராபீன்களை அங்கு வைத்து அதை காவல் காத்தார். இப்பொழுதோ அவர் சேராபீன்களை வெளியே நிறுத்தி, அவர்களை விருட்சத்தினிடம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவர்கள் தரிசனம் கண்டனர். பலி செலுத்தப்படாமலே அவர்கள் ஜீவ விருட்சத்தை அடைய முயன்றனர். ஆனால் இப்பொழுது, பலி செலுத்தப்பட்டுவிட்ட பிறகு, பிசாசு அவர்களுடைய கண்களைக் குருடாக்கி, அவர்கள் ஜீவ விருட்சத்தை அடையாதபடிக்கு மறுபக்கம் விரட்டியடிக்கிறான். கவனியுங்கள். கிறிஸ்து இவ்வுலகில் வந்தபோது, அவர் தேவனின் பரிபூரணமாயிருந்தார். தாவீது அவரைக் கண்டு, ''அவர் நீர்க் கால்களின் (rivers of water) ஓரமாய் நடப்பட்ட மரம்“ என்று முதலாம் சங்கீதத்தில் விவரிக்கிறான். அநேக ஆறுகள், ஒரு தண்ணீர்; அநேக வரங்கள், ஒரே ஆவி. அவருடைய இலைகள் உதிர்வதில்லை''. அவர் இவ்வுலகிற்கு வந்த போது என்ன நடந்தது? ரோம ஆதிக்கம் அந்த மரத்தை வெட்டி, அவரை மனிதனால் உண்டாக்கப்பட்ட மரத்தில் தூக்கிப் போட்டது. பிறகு தேவன் அந்த மரத்தை எழுப்பி அவருடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்து, தனக்கென ஒரு மணவாட்டியை உண்டாக்க, ஆவியைத் திரும்ப அனுப்பினார். ஆதாம் அப்படிப்பட்ட ஒருவளை ஏதேன் தோட்டத்தில் பெற்றிருக்க வேண்டும். அந்த மரம் துவக்கத்தில் பெந்தெகொஸ்தே மரமாயிருந்தது. 27போப்பாண்டவர், ''எல்லா சபைகளே, தாய் சபைக்கு திரும்ப வாருங்கள். துவக்கத்துக்கு வாருங்கள், ரோமாபுரிக்கு திரும்ப வாருங்கள்'' என்று கூறுவதை நாம் கேட்கிறோம். யாராகிலும் ஒரு சரித்திரக்காரர், ஒரு போதகர் அல்லது வேறெவராகிலும் எழுந்து நின்று என் முகத்தை நோக்கி, சபை ரோமபுரியில் துவங்கினது என்று எனக்குக் காண்பிக்கட்டும், சபை பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் துவங்கினது. முன்னூறு ஆண்டுகள் கழித்து ஸ்தாபனம் ரோமாபுரியிலும் துவங்கினது. ஆனால் சபையோ பெந்தெகொஸ்தே நாளில் துவங்கினது: தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவியைக் கொண்டு கிறிஸ்துவுக்கு மணவாட்டி மரம் ஒன்றை எழுப்பினார். என்ன நடந்தது? அது வளரத் தொடங்கினபோது ரோம் பூச்சி அதிலேறி அதை அரித்து போட ஆரம்பித்தது. பச்சைப் புழு விட்டதை முசுக்கட்டை பூச்சி தின்று, முடிவில் அடிமரம் மாத்திரம் விடப்பட்டது, ஆனால் தேவன், ''நான் திரும்ப அளிப்பேன்“ என்றுரைத்தார். அந்த மரம் திரும்ப வளரும், ஏனெனில் மணவாளன் மரம் மணவாட்டியைத் தேடி வரப் போகின்றது, 28லூத்தர் தோன்றினார். அவர் என்ன செய்தார்? அவர் நீதிமானாக்கப்படுதலை பின்பற்றினார். அதே விதமாகத்தான் சபை தோன்றினது. யோவான் ஸ்நானன் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்தான். கிறிஸ்து வந்து பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்தார். எபிரெயர்... இல்லை, நான் பரி. யோவான் 17:17ஐ குறிப்பிடுகிறேன்: ''உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே (வார்த்தையே) சத்தியம். ''அவர் வார்த்தையாயிருந்தார். அது உண்மை. அவரே செலுத்தப்பட்ட பலி. பிறகு பெந்தெகொஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவி. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல்; அந்த மரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றபோது, அது முழு மணவாட்டி மரமானது. ரோமர்கள் அதை தின்று போட்டனர். அது எவ்விதமாக அரிக்கப்பட்டதோ, அதே விதமாக அது வளரும். அது லூத்தரின் மூலம் மேலே வளரத் தொடங்கினது. என்ன நடந்தது? லூத்தரின் மரணத்துக்குப் பின்பு அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். கணவர் என்ன செய்தார்? பழைய செத்துப் போன கிளைகள் அனைத்தையும் மரத்திலிருந்து வெட்டியெடுத்து சுத்தப்படுத்தினார். அந்த மரம் தொடர்ந்து வளர்ந்து, நடுமரம் தோன்றினது. அது முன்குறிக்கப்பட்ட மரம்! அந்த வித்து அங்கு கிடந்திருந்தது. அது வளர்ந்து வரவேண்டும். அது மறுபடியும் வளர்ந்தது, வெஸ்லி தொடங்கினார். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலின் கீழ் ஒரு மகத்தான எழுப்புதலை பெற்றிருந்தனர். என்ன நடந்தது? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட போது, அவர் மறுபடியும் கிளைகளை நறுக்கி சுத்தம் செய்தார். ஸ்தாபனம் எக்காலத்தும் வளர்ந்ததில்லை. விழுந்து போன ஒரு ஸ்தாபனம் மறுபடியும் தழைத் தோங்கினதில்லை. 29பின்பு பெந்தெகொஸ்தேயினர் வரங்கள் புதுப்பிக்கப்படுதலுடன் தோன்றினர். அது என்ன செய்தது? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. தேவன் என்ன செய்தார்? கிளைகளை நறுக்கி சுத்தம் செய்தார். அவர் என்ன கூறினார்? ''நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?''. அந்த கலவையிலிருந்து அவர் இரத்தத்தால் கழுவப்பட்டு, வேதத்தால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டு, வார்த்தையில் திடமாய் நிற்கும் ஒரு சபையை - மணவாட்டியை - வெளியே கொண்டு வருவார். சாயங்கால வெளிச்சம் வந்துகொண்டிருக்கிறது. கனிகள் எங்கு பழுக்கும்? மரத்தின் உச்சியில். நான் மறுபடியும் ஆபிரகாமை விட்டு சென்றுவிட்டேன். நாம் திரும்ப ஆபிரகாமுக்கு வருவோம். இதோ அவர் வருகிறார், சாயங்கால வேளையின் ராஜரீக சந்ததி வருகிறார் ஜாதிகள்... இப்பொழுது கவனியுங்கள், 17ம் அதிகாரத்துக்கும் பிறகு; 17ம் அதிகாரத்தில் தேவன் ஆபிரகாமுக்கு சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் தரிசனமானார் என்று நாம் காண்கிறோம். 30ஆபிரகாமுக்கு அப்பொழுது தொண்ணூற்றொன்பது வயது. அத்தனை காலமும் அவன் தடுமாறாமல், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைத்தான். ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியிருந்தார். குழந்தை பிறக்குமென்று அவன் இன்னமும் உறுதியாக விசுவாசம் கொண்டவனாய், வாக்குத்தத்தத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தான். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு சகோதரன். ''ஆபிரகாம் நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும்...'' சாராளின் கர்ப்பம் செத்துப் போயிருந்தது. அவனும் ஆண்மையை இழந்திருந்தான். அவனுடைய சரீரம் செத்திருந்தது. வேதம் அவ்வாறு கூறுகிறது, அவனுடைய சரீரம் செத்துப் போனதற்கு சமமாயிருந்ததென்று. சாராளின் கர்ப்பம் செத்துப் போயிருந்தது. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போய் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழிந்து போன பிறகு அவள் அழகாயிருந்தாள். அவள் குழந்தைப் பெறுவாள் என்று ஆபிரகாம் இன்னமும் விசுவாசித்தான், ஏனெனில் தேவன் அவ்வாறு வாக்களித்திருந்தார். பார்த்தீர்களா? தேவன் வாக்களித்ததினால் வார்த்தையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தான். அதை கோட்பாடுகள் எவ்வளவுதான் மூடினாலும் கவலையில்லை, வார்த்தை இன்னமும் அங்கு புதைந்திருந்தது, அது உயிர் பெற வேண்டும். அந்த வார்த்தை ஆபிரகாமின் இருதயத்தில் புதைந்திருந்தது. எத்தனை பேர், “இதன் நாட்கள் முடிவு பெற்றுவிட்டன. அது அங்கேயே முடிவு பெற்றுவிட்டது'' என்று கூறினாலும் கவலையில்லை. வார்த்தை அங்கு புதைந்திருக்கும் வரைக்கும் அது படைக்கும் வல்லமையுள்ளது (Creative). ஏனெனில் அது ஜீவனுள்ள வார்த்தை. தேவனே வார்த்தையாயிருக்கிறார். தேவனுடைய ஜீவன் வார்த்தையில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அந்த வார்த்தை தேவனுடைய ஜீவனில் விழும் போது, ஏதோ ஒன்று சம்பவிக்கிறது, அது நிறைவேறுகிறது. 31இப்பொழுது கவனியுங்கள். அவர் ஆபிரகாமுக்கு சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் தரிசனமானார். தேவனுக்கு ஏழு இரட்டை மீட்பின் நாமங்கள் உள்ளன. இங்கு அவர் அவனுக்கு சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் ரூபத்தில் தரிசனமானார். அப்படியென்றால் ''எல்-ஷடாய்'' என்று அர்த்தம், எபிரெய மொழியில் எல் என்றால் ''பலசாலி“ என்று பொருள், ஷாட் என்றால் ”மார்பகம்'' என்று பொருள் - ஒரு ஸ்திரீக்குள்ள மார்பகம் போல். ''ஷாட்“ என்னும் சொல் ஒருமை. ”ஷடாய்“ என்னும் சொல் பன்மை. தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் கொண்டிருந்த நூறு வயது கிழவனுக்கு இது எவ்வளவு இனிய ஆறுதலாயிருந்திருக்கும்! இதோ தேவனுடைய சத்தம் அவனுக்குண்டாகி, ''நான் எல் ஷடாய், நான் மார்பகம் கொண்ட தேவன்'' என்றுரைத்தது. ஓ, நமக்கு எப்படிப்பட்ட ஆறுதல் உள்ளது! இப்பொழுது, இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், வெறும் “மார்பகம்'' (breast) அல்ல, ”ஆனால் மார்பகம் கொண்டவர்“ (breasted) நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். 32ஒரு குழந்தை வியாதிப்பட்டு அழும்போது, தாய் என்ன செய்கிறாள்? அவள் அந்த சிறுவனைக் கையிலெடுத்து தன் மார்பகத்தினிடம் கொண்டு வருகிறாள். அவள்... அவனும் தாயின் பெலனை மார்பகத்தின் மூலம் தன் சரீரத்தில் உட்கொள்கிறான். அவன் திருப்தியடைவது மாத்திரமல்ல... அவன் அமைதியாகிவிடுகிறான். அவன் தன் தொண்டை கிழிய கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான், அவன் அமைதி குலைந்தவனாயிருக்கிறான். ஆனால் தாய் அவனைக் கையிலெடுத்து தன் மார்பகத்தில் கொண்டுசென்று, அவனுக்காக மெளனமாக இசைப்பாடி அவனை இப்படியும் அப்படியும் ஆட்டும் போது, அவன் தன் தாயை உணருகிறான், அவனுடைய தலையை அவளுடைய மார்பகத்தில் உள்ளது. அவன் பாலுண்ணத் தொடங்கி, தன் தாயிலிருந்து பெலனை தன் சரீரத்துக்குள் இழுத்துக் கொள்கிறான். அவன் இப்படியாக தன் வலிமையை மீண்டும் பெற்றுக் கொள்கிறான். அது மாத்திரமல்ல, அவன் திருப்தியடைகிறான். அவன் நாளுக்கு நாள் வலிமையடைகிறான். 33ஆபிரகாமின் சந்ததிக்கு இது எப்படிப்பட்ட ஒரு அனுபவம்! அவர் இன்னும் சர்வ வல்லமையுள்ள தேவனாக, எல் ஷடாயாக இருக்கிறார். அவர் வேதத்தில் கூறியுள்ள எந்த ஒரு வாக்குத்தத்தத்தையும் நாம் பற்றிக் கொள்ள முடியும். அவருடைய சந்ததியே அவருடைய பிள்ளைகளே, நீங்கள் வியாதிப்பட்டிருந்தால். ''அவருடைய தழும்புகளால் குணமானோம்'' என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மார்பகத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அது திருப்தியளிக்கிறது. நாம் எல் என்னும் பெலசாலியிடமிருந்து நம்முடைய பெலத்தை எப்பொழுதும் அவரிடமிருந்து கிரகித்துக் கொண்டேயிருக்கிறோம். அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலம் அவருடைய ஜீவனை அவரிலிருந்து கிரகித்துக் கொண்டிருக்கிறோம். எல் ஷடாயின் மார்பகத்தில் சாய்ந்துக் கொண்டு, கிறிஸ்துவின் வல்லமையை அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலம் நமக்குள் கிரகித்துக் கொண்டிருக்கிறோம் என்று விவாதித்து அறிந்துள்ள நபருக்கு அது எத்தகைய உணர்ச்சியை அளிக்கிறது. எல் ஷடாய் ஆபிரகாமை தம் மார்பகத்தில் இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிடத்தினபோது - அப்பொழுது அவன் எழுபத்தைந்து வயதுடைய கிழவன். அவனுடைய மனைவிக்கு அறுபத்தைந்து வயது. அன்று முதல் அவன் அந்த மார்பகத்தை விடவேயில்லை. அவன் அந்நிய தேசத்தில், தேவனை அறியாத அந்நிய மக்களிடையே நடந்து சென்றான். ஆனால் அவன் எப்பொழுதும் சாட்சி கொடுத்து, விசுவாசத்தில் வல்லவனாகி, தேவனை மகிமைப்படுத்தினான். ஏனெனில் அவன் அந்த வாக்குத்தத்தத்திலிருந்து கிரகித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருந்தான். 34அந்தகாரமும், மூட நம்பிக்கையும், உணர்ச்சியும், அறிவும் நிறைந்துள்ள இந்த வேளையில், இது சபைக்கு இன்றிரவு எப்படிப்பட்ட நம்பிக்கையாய் விளங்குகிறது. ''ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி, கடைசி நாட்களில் மானிட அறிவு கொண்ட ஒரு சபை தோன்றும் (1தீமோத்தேயு 3). ''பிற்காலங்களிலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள். நிச்சயமாக. “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ''துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள்''. ''டாக்டர் பி எச்.டி, எல்.எல்.டி.க்யூ. எஸ்.டி. போன்ற பட்டங்கள். ”டாக்டர் இன்னார் இன்னார் எங்கள் போதகர்.'' அவரைக் கொட்டைக்கும் காப்பிக் கொட்டைக்கும் வித்தியாசம் தெரியாத பேதமை கொண்ட என் குடும்பத்திலுள்ள ஒருவன் அல்லது என் பிள்ளை கிறிஸ்துவை அறிந்திருப்பதை நான் நலமென்று கருதுவேன். அது உண்மை! அவனை எங்காவது ஒரு அடி மரத்திடம் கொண்டு சென்று அவனை முழங்கால்படியிடச் செய்து, பரிசுத்த ஆவி அவனுக்குள் வருமளவும் அவனோடு சேர்ந்து ஜெபிப்பேன். அப்படிப்பட்ட ஒருவனை நான் கொண்டிருப்பேனேயன்றி, ஒரு டாக்டர் பட்டத்தின் மூலம் அவனுக்குள் மனோதத்துவம் அனைத்தும் ஊற்றுவதை நான் விரும்பமாட்டேன். அவனுக்கு தேவனுடைய வார்த்தையை நான் எடுத்துக் கூறுவேன், ஆம். 35''துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள், இணங்காதவர்கள், அவதூறு செய்கிறவர்கள், இச்சையடக்க மில்லாதவர்கள், நல்லோரைப் பகைக்கிறவர்கள்''. ''அது கம்யூனிஸ்டுகள்'' என்று நீங்கள் கூறலாம். இல்லை, இல்லை! அது கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள். “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒரு போதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்''. அது உண்மை, அது தான் அது. அந்த நாளை நாம் காண்கிறோம். 36விசுவாசி ஒருவன் தன்னை எல்லா அவிசுவாசத்தினின்றும், தேவ பக்தியற்ற அவர்களுடைய எல்லா கோட்பாடுகளின்றும், தேவபக்தியற்ற அவர்களுடைய எல்லா உபதேசங்களின்றும் தன்னைப் பிரித்துக் கொண்டு, கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தும், வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதை இறுகப் பற்றிக் கொண்டு அது நிறைவேறுவதை காண்பதென்பது அவனுக்கு எத்தகைய ஆறுதலை அளிக்கிறது. நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க நேர்ந்தாலும், அதில் நிலைத்திருங்கள்! தேவன் அதை வாக்களித்துள்ளார், அவர் உங்களை அதற்கு வழி நடத்தினார், அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் அதில் நிலைத்திருங்கள் அதிலிருந்து பின் வாங்கிப் போகாதீர்கள், அதிலேயே நிலைத்திருங்கள். அதைக் குறித்து நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருந்தால், அதில் நிலைத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் தள்ளாடினால், ஒரு சிறு காரியத்திலும் பின் வாங்கிப் போவீர்கள். குரங்கு பிரகாசமான பொருட்களை பாய்ந்து பிடித்துக்கொள்கிறது, ஆனால் கரடியோ தன் பிடியை இறுகப் பிடித்திருக்கிறது என்னும் பழமொழி உண்டு. எனவே, நீங்கள் நிலைத்திருங்கள்! ஆம் பிடித்துக் கொள்ளுங்கள், இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்! 37எல்-ஷடாய்! அவர், ''ஆபிரகாமே, நான் எல்-ஷடாய். நான் பெலசாலி. நீயோ வயோதிபன். உனக்கு இப்பொழுது நூறு வயது, உன் பெலன் அனைத்தும் போய்விட்டது. ஆனால் நானே உன் பெலன் உன் நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது; ஆனால் நானே நம்பிக்கை!'' என்றார். ஓ, இப்பொழுது புற்று நோய் போன்ற வியாதியால் அவதியுறுபவர்களே, உங்கள் பெலன் எங்கிருந்து வருகிறதென்று உங்களால் காணமுடியவில்லையா? அறுவை சிகிச்சைச் செய்யும் மருத்துவரின் கத்தியிலிருந்தல்ல; ஆனால் தேவனுடைய வார்த்தையிலிருந்து! “நானே உன் பங்கு! நானே உன் பெலன் உன் பெலனை என்னிடமிருந்து இழுத்துக் கொள்!”. அறுவை சிகிச்சைச் செய்யும் மருத்துவரை நான் அவமதிக்கவில்லை: அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை அவர் செய்கிறார். ஆனால் தேவனே சுகமளிப்பவர். எந்த அறுவை சிகிச்சை மருத்துவரும், மருத்துவரும், மருந்தும் சுகமளிப்பதில்லை, இல்லை, ஐயா சுகப்படுத்தக் கூடிய ஒரு மருந்தும் அவர்களிடம் இல்லை. எந்த ஒரு மருத்துவரும் அதை உங்களிடம் கூறுவார். அவர்களிடம் அதற்கு உதவி செய்யக் கூடிய பொருட்கள் உள்ளன. ஆனால் சுகமளிப்பவர் தேவனே. அவர்கள் உங்கள் கையில் கத்தியால் ஆழமாக வெட்டலாம். ஆனால் தேவனே அதை சுகப்படுத்த முடியும். உடலின் பாகங்கள் அமைக்கும் பொருளை (tissue) அவர்களால் உற்பத்தி செய்ய முடியாது. அப்படி செய்ய முடிந்திருந்தால், ஒரு மனிதனையே அவர்கள் உண்டாக்கியிருப்பார்கள். எனவே பாருங்கள், தேவனே சுகமளிப்பவர். முறிந்த எலும்பை நீங்கள் ஒன்றாக சேர்க்கலாம், ஆனால் தேவனே அதை சுகப்படுத்த வேண்டும். தேவனே சுகமளிப்பவர். “உன் நோய்களையெல்லாம் குணமாக்கும் கர்த்தர் நானே''. தேவனுடைய வார்த்தை பொய்யுரைக்க நீங்கள் செய்ய முடியாது; அது ஒவ்வொரு முறையும் உண்மைக்கே திரும்ப வரும், அதற்கே நேரடியாக. அது பொய்யுரைக்க உங்களால் செய்ய முடியாது. 38வேதாகமத்தில் வேத வாக்கியங்கள் முரணாயுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். வேதாகமத்திலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரணாயுள்ளன என்று எனக்கு காண்பித்தால் எனக்கு ஊதியத்தில் கிடைக்க பெறும் ஒரு ஆண்டு ஊதியத்தை கொடுத்துவிடுகிறேன் என்று நான் மக்களிடம் கூறியுள்ளேன். அது உண்மை. அதில் முரணான எதுவும் கிடையாது. உங்கள் மாம்ச சிந்தை அதை அந்த விதமாக பார்ப்பதனால் அப்படி தோன்றுகிறது. பரிசுத்த ஆவியே வார்த்தைக்கு அர்த்தம் உரைப்பவர். வார்த்தை உண்மையாயுள்ளது. அவை இணைக்கப்பட்டுள்ளன. அது “கோணல் மாணலாக வெட்டப்பட்ட படத் துண்டுகளை இணைக்கும் புதிர் விளையாட்டைப்” போன்றது. அவைகளை சரியான இடங்களில் பொருத்தி, தேவனுடைய மீட்பும், அவர் ஜனங்களுக்கு அளிக்கும் ஆசீர்வாதமும் என்னும் படத்தை அமைக்க பரிசுத்த ஆவியால் மாத்திரமே முடியும். ஆமென்! அவை ஒன்றுக்கொன்று முரணாயில்லை. வேதத்தில் எந்த ஒரு வேதவாக்கியமும், மற்றொரு வேத வாக்கியத்துக்கு முரணாக அமைந்திருக்கவில்லை. அப்படியிருக்குமானால், அது அச்சடிக்கப்பட்டிருக்கும் காகிதத்தின் விலை மதிப்பையும் கூட பெற்றிருக்காது. அது ஏமாற்றக் கூடிய ஒன்றாய் அமைந்திருக்கும். தேவன் உண்மையுள்ளவர், நீதியுள்ளவர், பரிசுத்தமுள்ளவர், உத்தமமானவர், அவர் தேவன். 39ஆபிரகாமுக்கு தேவனிடமிருந்து, “நான் எல் ஷடாய். நான் பெலனளிப்பவர். உன் மனைவியின் கர்ப்பம் உலர்ந்துவிட்டது. ஸ்திரீக்குள்ள வழிபாடு அவளுக்கு நின்று போய் நாற்பது ஆண்டுகள் கழித்துவிட்டன. உன் சரீரம், செத்துப் போனதற்குச் சமம்; நான் ”எல் ஷடாய்'' என்னும் வார்த்தை உண்டான போது, அவன் இஸ்மவேலைப் பெற்றான். அவர், ''அது அவனல்ல, இல்லை, இவன் பெரியவனாவான். இவன் அநேக பிரபுக்களைப் பெறுவான். ஆனால் நான் செய்த வாக்குத்தத்தம், “உனக்கும் சாராளுக்கும் பிறக்கப் போகும் மகன்” என்றார். அது தான்! ஆமென். ஆபிரகாமுக்கு நல்லுணர்வு தோன்றினது. அவர் “ஆபிரகாமே, உன்னிடம் ஒன்றை இப்பொழுது கூறப் போகின்றேன். உன் பெயரை நான் மாற்றப் போகின்றேன். இனி நீ ஆபிராமே என்றழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றழைக்கப்படுவாய் என்றார். ஆபிராம் என்றால் ”உயர்ந்த தகப்பன்'' என்று பொருள். ஆபிரகாம் என்பதற்கு “ஜாதிகளுக்குத் தகப்பன்'' என்று பொருள். அவளும் சா-ரா-ய் என்று இனி ஒரு போதும் அழைக்கப்படுவதில்லை; சா-ரா-ள் என்று அழைக்கப்படுவாள். சாராள் என்றால் ”ராஜகுமாரத்தி“ அவர்களுடைய பெயரை அவர் மாற்றினார். என்ன ஒரு மாற்றப்பட்ட பெயர். ஏதோ ஒன்று சம்பவித்தது. ஏனெனில் அவர்கள்... பாருங்கள்... காரியங்கள் நிகழும் முன்பு ஒரு மாறுதல் இருக்கவேண்டும். அவர்களுக்கு அந்தப் பெயர் இருக்கும் வரைக்கும் அவரால் அவர்களுக்கு அந்த பிள்ளையை கொடுக்க முடியவில்லை. 40உங்கள் பெயர் பரலோகத்தின் புத்தகத்தில் இல்லாத வரைக்கும் உங்களால் மறுபடியும் பிறக்க முடியாது. நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் போன்ற ஒவ்வொரு சபையிலும் உங்கள் பெயரை எழுதிக் கொண்டு, ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு மாறி, அவர்கள் அனைவருடனும் வீண் சந்தடி செய்யலாம். ஆனால் ஏதாவது ஒன்று நிகழ்ந்து புது சிருஷ்டிப்பு வரவேண்டுமானால், உங்கள் பெயர் பரலோகத்தின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். புது ஜீவன் வருவதற்கு முன்பு, அவர்களுடைய பெயர்கள் மாற்றப்பட வேண்டியதாயிருந்தது. நீங்களும் கூட உங்கள் பெயரை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த புத்தகங்களிலிருந்து பரலோகத்தின் புத்தகத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். “உன் பெயர் இனி ஒரு போதும் ஆபிராம் ”உயர்ந்த தகப்பன்“ என்றிராமல், ஆபிரகாம் ”ஜாதிகளுக்குத் தகப்பன்“ என்றிருக்கும். இனி போதும் சாராய் அல்ல, ஆனால் சாராள், ராஜகுமாரத்தி''. 41ஓ, இப்பொழுது நாம் 18ம் அதிகாரத்துக்கு வருவோம். 17லிருந்து நாம் நேரடியாக 18க்கு செல்வோம். ஏனெனில் அது... இன்றிரவு அதைக் காட்டிலும் அதிக தூரம் சென்று, உங்களை இங்கு பிடித்து வைக்க விரும்பவில்லை. ஏனெனில் நாளை இரவு நீங்கள் திரும்பி வர வேண்டுமென்று விரும்புகிறேன். நாம், நம்மால் இயன்றவரை, விரைவாக 22க்கு செல்வோம். இப்பொழுது கவனியுங்கள். ஒரு நாள், ஒருக்கால் இரண்டு மூன்று நாட்களுக்கு பின்பு, ஆபிரகாமும் சாராளும்; அவர்களுடைய கூடாரங்கள் போடப்படுகின்றன. ஆனால் தூரத்திலுள்ள அந்த பட்டினத்தில், திருமதி லோத்து அங்கிருந்து புது விதமான உடைகள் அனைத்தும் உடுத்தியிருப்பாள் என்று எண்ணுகிறேன். அவள் எல்லா விதமான தலைமயிர் அலங்காரம் செய்துக் கொண்டாள். அவள் டாம்பீகமான வாழ்க்கை வாழ்ந்து, அவளுடைய குமாரத்திகளையும் அதே விதமாக வளர்த்தாள். இன்று தாய் வேசி செய்து அவளுடைய குமாரத்தி சபைகளையும் அதேவிதமாக நடக்கச் செய்வது போல். ஆனால் சாராளோ எல்லா தேசங்களிலுள்ள பெண்களைக் காட்டிலும் மிகவும் அழகில் சிறந்து விளங்கினாள். அவள் தரிசு நிலத்தில் வாழ்ந்தாள். ஏனெனில் அவள் வாக்குத்தத்தத்தைப் பெற்றவனைப் பற்றிக் கொண்டிருந்தாள். இத்துடன் இதை விட்டுவிடுகிறேன். நான் தொடர்ந்து செல்ல வேண்டும். இல்லாவிடில் உங்களை நள்ளிரவு வரை இங்கு வைத்திருக்க வேண்டியிருக்கும். சாராள் ஆபிரகாமைப் பற்றிக் கொண்டிருந்தாள். அது உண்மை. அவன் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தான். நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கொள்ளுங்கள். வாக்குத்தத்தத்தைப் பெற்றுள்ளவர் அவரே! அவரே வாக்குத்தத்தம், அவரே வாக்குத்தத்தம்! கவனியுங்கள். 42ஒரு நாள் காலையில் சூரியன் மிகவும் உஷ்ணமாயிருந்தது. ஆபிரகாம் தன் கூடாரவாசலில் 'ஓக்' மரத்தின் நிழலில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தான். அவன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அப்பொழுது சுமார் பதினொரு மணி இருக்கும். மூன்று புருஷர் தங்கள் உடையில் தூசி படிந்தவர்களாய் தன்னை நோக்கி நடந்து வருகிறதை ஆபிரகாம் கண்டான். ஆபிரகாம் கூடார வாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்க்கொண்டு ஓடினான். அவனுடைய இருதயத்திலிருந்த ஏதோ ஒன்று அவனுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது. அவன் ஓடிப்போய், அவர்களுடைய கால்களில் விழுந்தான். அவன் ''ஆண்டவரே'' என்றழைத்தான் என்று கவனியுங்கள். அது வினோதமல்லவா? மூன்று பேர். ஆனால் “என் ஆண்டவரே.'' லோத்தை கவனியுங்கள். இரண்டு பேர் அங்கு சென்ற போது, அவன் ''ஆண்டவன்மார்களே'' என்றழைத்தான். ஆபிரகாம்... லோத்து இருவரை “ஆண்டவன்மார்களே'' என்றழைத்தான். ஆபிரகாம் அந்த மூன்று பேர்களையும், ”ஆண்டவரே! என் ஆண்டவரே!'' என்றழைத்தான். ஆமென் ஓ, காலம் சமீபமாயிருக்கிறது! கவனியுங்கள், அவன், ''ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், இந்த 'ஓக்' மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறும். நான் கால்களைக் கழுவ கொஞ்சம் தண்ணீரும், உண்ண கொஞ்ச அப்பமும் கொண்டு வருகிறேன், என்னைப் பார்க்கவே இங்கு வந்திருக்கிறீர்'' என்றான் அவர்கள் நடந்து மரத்தடியில் சென்றனர். 43ஆபிரகாம் கூடாரத்தின் பின்புறம் சென்று, “சாராளே சீக்கிரமாய் மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அடுப்பின் மேல் சில அப்பங்களைச் சுடு'' என்று சொல்லிவிட்டு, மாட்டு மந்தைக்கு ஓடி ஒரு இளங்கன்றைப் பிடித்து, அதைக் கொண்டு சமைத்து, அதனுடன் சிறிது வெண்ணெயும் பாலும் கொண்டு வந்து அவர்கள் முன்பாக வைத்தான். அவர்கள் புசித்தார்கள். அவர்களில் ஒருவர் தேவனே! அப்படித்தான் வேதாகமம் கூறுகிறது. நீங்கள் இதைக் குறித்து விவாதிக்க விரும்பினால் தாராளமாய் செய்யுங்கள். ஆபிரகாம் அவரை, “ஏலோகிம், தேவன்'' என்றழைத்தான். அவன் அவரை அறிந்திருக்க வேண்டும்; அவன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான். கவனியுங்கள், ”தேவனாகிய கர்த்தாவே“. அவர்களில் ஒருவர் தேவன். ஆபிரகாம், அவரைப் பார்த்தபோது, அவரை அடையாளம் கண்டுக்கொண்டான். அங்கு பாருங்கள். 44ஒரு முறை ஒருபோதகர் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, அந்த மனிதன் தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்ன?'' என்று கேட்டார். நான் “அவர் தேவனென்றும் ஆபிரகாம் கூறினான். எல்லா மொழி பெயர்ப்பாளர்களும் அவ்வாறே அதைக் கர்த்தர் என்று மொழி பெயர்த்துள்ளனர். ஆங்கில வேதாகமத்தில் L-O-R-D என்னும் சொல் 'L' பெரிய எழுத்துடன் துவங்குகிறது. வேதத்தைப் படிக்கும் எவரும் அது ஏலோகிமைக் குறிக்கிறது என்பதை அறிவர். அது ஏலோகிம் என்னும் சொல்லிலிருந்து வந்த ஆங்கிலச் சொல். ஆதியிலே தேவன் ஏலோகிம், சர்வ வல்லமையுள்ள தேவன், தம்மில் தாமே ஜீவிக்கிறவர், வானத்தையும் பூமியை சிருஷஷ்டித்தார். இதோ அவர் மறுபடியும் அவனுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார்” என்றேன். அவர், ''நல்லது, உங்களுக்குத் தெரியுமா, அது ஒரு சாதாரண மனிதன்“ என்றார். நான், “நிச்சயமாக, அவர் மாம்சம் புசித்தார். அவர் அப்பம் புசித்து பாலைக் குடித்தார். நிச்சயமாக அவர் தேவன்” என்றேன். அவர், “அது எப்படி முடியும்?'' என்றார். நான் “மிஸ்டர் நீங்கள் - நீங்கள்...” என்றேன். அவர்கள் உங்கள் மனதைப் புண்படுத்தவில்லையென்று எண்ணுகிறேன். அவர்கள் யேகோவா சாட்சிகள். அவர் என்னிடம், ''நல்லது, திரு. பிரன்ஹாமே, இங்கு பாருங்கள். உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். தேவன் அப்படி செய்ய முடியாது'' என்றார். நான், “என் தேவனை உங்களுக்குத் தெரியாது, அவ்வளவு தான்'' என்றேன். நான் தொடர்ந்து, ''மானிட சரீரம் என்னென்ன பொருட்களைக் கொண்டு உண்டானது? பெட்ரோலியம், பொட்டாஷ், விண்வெளி வெளிச்சம் (cosmic light) போன்ற பதினாறு மூலப் பொருட்கள் சேர்ந்து உண்டானது. சோதோமை பார்த்து அறிவதற்கென கீழே இறங்கி வர அவர் செய்ய வேண்டியிருந்த ஒரே செயல்... அவர் கையை நீட்டி, ஒரு கை நிறைய விண்வெளிச்சம், பெட்ரோலியம் போன்றவைகளை எடுத்து 'வ்யூ' என்று ஊதி, 'காபிரியேலே, இங்கு வா. இதற்குள் புகுந்துக் கொள்' என்றார். அது உண்மை. அவர் மறுபடியும் கையை நீட்டிகை நிறைய தூசை எடுத்து, 'மிகாவேலே, இங்கு வா. இதற்குள் புகுந்துக்கொள்' என்றார். அது போன்று தமக்காகவும் ஒரு சரீரத்தை உண்டு பண்ணினார். அவர் கடைசி நாட்களில் இருக்கப் போகிற ஒன்றுக்கு பிரதிநிதித்துவமாக இருக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவர் இறங்கி வந்து மாம்ச சரீரத்தில் பேசுகிறார். முற்றிலும் உண்மை. ஓ, அவர் அவ்விதமாக இருப்பதற்காக எனக்கு மகிழ்ச்சி! 45என்றாவது ஒருநாளில் என்னில் ஒன்றும் விடப்பட்டிருக்காது. நானும் அந்த பதினாறு மூலபொருட்களைக் கொண்டு என்னை நோக்கிப் பார்த்து உண்டாக்கப்பட்டவன். அன்றொரு நாள் எனக்குள்ள இரண்டு மூன்று தலைமயிரை நான் வாரிக்கொண்டிருந்தேன். என் மனைவி என்னிடம், “பில்லி, உமக்கு வழுக்கை விழுகிறது'' என்றாள். நான், ''தேனே, அவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகவில்லை'' என்றேன். அவள், “உமக்கு முன்பு சுருண்ட தலைமயிர் இருந்தது” என்றாள். நான், “ஆம், ஆனால் அவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகவில்லை'' என்றேன். அவள், “அவை எங்கேயுள்ளன என்று என்னிடம் கூற வேண்டுகிறேன்'' என்றாள். நான், “தேனே, அவைகளை நான் பெறுவதற்கு முன்பு, அவை எங்கிருந்து என்னிடம் வந்தன என்று கூறு. நான் பெறுவதற்கு முன்பு அவை எங்கிருந்தனவோ, நான் அங்கு செல்வதற்காக அவை காத்துக் கொண்டிருக்கின்றன'' என்றேன். ஆமென் மகிமை! “உங்கள் தலையிலுள்ள மயிர் ஒன்றாகிலும் அழிந்து போவதில்லை'' என்று வேதம் கூறுகிறது. அல்லேலுயா! அது முற்றிலும் உண்மை. அது இல்லாதிருந்தது. இப்பொழுது இருக்கிறது. அது இல்லாமல் போனாலும் பிறகு இருக்கிறது. நிச்சயமாக முற்றிலுமாக பெட்ரோலியம், விண்வெளி வெளிச்சம், கால்சியம், பொட்டாஷ் போன்றவை. தேவன்... நான் ஒன்றுமில்லாமல், நீங்கள் காண்பதற்கு நான் ஒன்றுமில்லாமல் வெறும் சாம்பலாய் மாத்திரம் இருக்கும் போது, அவர் அந்த பொட்டாஷையும் பெட்ரோலியத்தையும் ஒன்றாக எறிந்து பேசுவார். அல்லேலூயா! நான் மறுபடியும் அவருடைய சமுகத்தில் உயிர் வாழுவேன். அல்லேலுயா அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார். ஆமென். ”என் பிதா எனக்குத் தந்தவைகளில் ஒன்றாகிலும் நான் இழந்து போகவில்லை, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.'' அதை நான் விசுவாசிக்கிறேன். ஆபிரகாமின் சந்ததி என்னும் முறையில் அந்த நாளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திரபாரங்களுள்ள நகரத்துக்கு நான் காத்திருக்கிறேன். ஆமென், நிச்சயமாக. இது எவ்வளவுதான் சுருக்கமாக விழுந்து தலைமயிர் கொட்டிப்போனாலும் என்ன நடந்தாலும் கவலையில்லை. தேவன் கடைசி நாளில் எல்லா இளமையின் சிறப்போடும் அதை மறுபடியும் எழுப்புவார். அவர் அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார். நான் அந்த நகரத்துக்குக் காத்திருக்கிறேன். ஆமென். 46ஓ என்னே! அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை எனக்காக அங்கு காத்திருக்கிறது என்பதை அறிந்தவனாய் நான் இப்பொழுது மிகவும் பக்தி பரவசப்படுகிறேன். அந்த நகரத்துக்கு நான் காத்திருக்கிறேன். என் இருதயம் அதை நோக்கித் துடிக்கிறது. ஓ, நான் வேறெந்த வழியிலும் திரும்ப மாட்டேன். நான் நேராக அந்த இடத்தையே நோக்கிப் பார்ப்பேன். தேவனே, அங்கேயே நான் உண்மையும் விசுவாசமுள்ளவனாய் நிலைநின்று, ஜீவனுக்கு செல்லும் வழியை எல்லாவிடங்களிலும் அறிவித்து களைப்படைந்த ஒவ்வொரு யாத்திரீகனையும் என்னால் இயன்றவரை அவ்வழியில் நடத்த உதவிபுரியும். ஆம், அண்மையில் அதைக் குறித்த ஒரு தரிசனத்தை நான் கண்டேன். என் அன்பார்ந்தவர்களை அங்கு நான் இளமையாகக் கண்டேன். அது அங்குள்ளது. அது அங்குள்ளது. அது அங்குள்ளதென்றும் நானறிவேன்! ஆம் ஐயா! ஒருக்கால் நீங்கள் அதை கிறிஸ்தவ வர்த்தகரின் சத்தம் என்னும் பத்திரிகையிலும், இன்னும் அதை வெளியிட்ட மற்ற பத்திரிக்கைகளிலும் படித்திருப்பீர்கள். நண்பர்களே, அது தரிசனம் அல்ல. அவர் எனக்கருளின பல்லாயிரக் கணக்கான தரிசனங்களை நான் கண்டிருக்கிறேன். எனவே அவை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். ஆனால் இது தரிசனம் அல்ல. நான் அங்கு நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அது அங்குள்ளதென்று நானறிவேன். நண்பர்களே, அது அங்குள்ளது, அது அங்குள்ளது! அது அங்குள்ளதென்று நானறிவேன். ஆம்! நான் இங்கு நின்றுக் கொண்டுள்ளது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக. தேவன் எனக்குதவி செய்வாராக. நான் புத்தி சுயாதீனத்துடன் இந்த பிரசங்க பீடத்தில் நின்றுக் கொண்டிருப்பேனானால், அது அங்குள்ளது தேவன் தமது வாக்குத்தத்தத்தை அளித்துள்ளார், அது உண்மையானது, அது உண்மை! ஆம், ஐயா அது அங்குள்ளது. 47கவனியுங்கள். இந்த மனிதர் அங்கு உட்கார்ந்து புசித்தனரென்று நாம் காண்கிறோம். அவர்களில் இருவர் எழுந்து சோதோமுக்குச் சென்றனர். ஒருவர் ஆபிரகாமுடனே தங்கிவிட்டார். அவர்களுடைய உரையாடலை நாம் கவனிப்போம். அவர்கள் சோதோமையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் விசித்திரமான ஏதோ ஒன்றுண்டு என்று ஆபிரகாம் கண்டுகொண்டான். அவர் எழுந்து புறப்பட ஆயத்தமானபோது, அவர், ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினால் நான் செய்யப் போகிறதை “ஆபிரகாமுக்கு மறைப்பேனா? அவன் தன் பிள்ளைகளுக்குக் கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன். சோதோமின் பாவம் மிகவும் கொடியதாயிருப்பதனால், அதின் கூக்குரல் என்னிடத்தில் வந்து எட்டினது'' என்றார். அது சரியா என்று பார்த்து அறிய அவர் இறங்கி வந்தார். 48இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அன்றிரவு நான் கூறினது போன்று அந்த தூதர்களில் இருவர் சோதோமுக்கு சென்று அந்த சோதோமியருக்கு பிரசங்கித்தனர். அன்றிரவு அவர்கள் அந்த சோதோமியரை வார்த்தையில் குருடாக்கினர். ஆனால் அங்கு ஒருவர் இருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்களுக்கு அவர்களுடைய அடையாளம் இருந்தது, அவர்கள் மத்தியில் ஒரு அந்நியர். லோத்தைப் பாருங்கள். வாசலில் உட்கார்ந்து கொண்டு, ''என் ஆண்டவன்மார்களே'' என்றான். அவன் அந்த விதமாக வாழ்ந்து வந்தான் அவன், “என் வீட்டுக்கு வாருங்கள்'' என்றழைத்தான். அவர்களோ, ''நாங்கள் வீதியிலே உறங்குவோம்'' என்றனர். என்ன ஒரு வீடு. ஆனால் அவர்கள் ஆபிராகாமிடம் வந்த போது, அவர்கள், ''இந்த நோக்கத்துக்காகவே நாங்கள் வந்துள்ளோம். உன் பக்கத்தில் நாங்கள் அமருகிறோம்'' என்றனர். 49அப்படிதான் இருக்க வேண்டும். அந்த விதமாக வாழுங்கள். தேவன் உங்களை உபயோகிக்க விரும்புவரானால், எங்கு வந்து உங்களைக் கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார். நீங்கள் தேவனுக்கு முன்பாக சுத்தமான வாழ்க்கை நடத்தினால், உங்கள் வார்த்தைகள் உத்தமமாயிருக்கும், உங்கள் வாழ்க்கை உண்மையுள்ளதாய் இருக்கும். அந்த மாதிரி இடத்துக்குத்தான் தூதர்கள் வருகின்றனர். எலிசபெத்தையும் சகரியாவையும் பாருங்கள். அவன் உத்தமமாயும் நேர்மையாயும் கர்த்தருடைய கற்பனைகள் அனைத்தின்படியும் நடந்து வந்தான். அப்படித்தான் நாம் வாழ விரும்புகிறோம். எனவே தேவன் நம்மை உபயோகிக்க ஆயத்தமாயிருக்கும்போது, அவர், ''இவர்கள் என் ஜனங்கள். இந்த சபைக்கு என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் என்னை விசுவாசிக்கின்றனர். அவர்கள் என் வார்த்தையின் பேரில் நிற்கின்றனர்“ என்பார். பாருங்கள், அப்படித்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள்; அந்த வாழ்க்கை வாழ. 50இந்த தூதன், “நான் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைக்கமாட்டேன், ஒரு உற்பவ காலத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்'' என்று கூறினதாக நாம் காண்கிறோம். கவனியுங்கள், அவர் அவனை ஆபிராம் என்றழைக்கவில்லை, ஆபிரகாம் என்றழைத்தார். அவனுடைய பெயர் மாற்றப்பட்டதை அவர் எப்படி அறிந்தார்? அவர்தான் அவனுடைய பெயரை மாற்றியது. நிச்சயமாக. அவ்வாறே அவர் சாராய் என்றழைக்கவில்லையென்று உங்களுக்கு தெரியுமா? சாராள் ''உன் மனைவி சாராள் எங்கே?'' அவன் விவாகமானவன் என்றும் அவனுக்கு சாராள் என்னும் பெயர் கொண்ட மனைவியிருக்கிறாள் என்றும் அவருக்கு எப்படித் தெரியும்? ஆபிரகாம், ''உமக்குப் பின்புறமாய் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்,'' என்றான். 51என்ன ஒரு உத்தமமான பெண்மணி! இன்றைக்கு பெண்கள் அதிகமாக பேசுகின்றனர். அவர்களுடைய கணவரைப் பேச அவர்கள் விடுவதில்லை. அவர்கள் கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு, குட்டை கால் சட்டை அணிந்து அங்கு வந்து அவர்களே எல்லாவற்றையும் பேசி முடித்து விடுகின்றனர். என்ன ஒரு தாறுமாறான ஜனங்கள் அவள் தலைமை சமையற்காரியாகவும், குப்பி (Bottle) கழுவுபவளாகவும் இருக்க வேண்டியவள். அவள் சமையலைறையை விடும்போது, தாய் என்னும் முறையில் அவள் வேலை செய்ய வேண்டிய இடத்தை விட்டு விடுகிறாள். இப்பொழுது நாம் காண்கிறோம், பின்னால் இருந்து கொண்டு உத்தமமாக தங்களை நடப்பித்துக் கொண்ட சீமாட்டிகள்; அவர்களுடைய தலைவன் தான் தீர்மானம் அனைத்தும் செய்பவர். யாராகிலும் ஒரு மனிதன் இதை தன் மனைவியிடம் எடுத்துக் கூறும்போது, அவள், “இப்பொழுதே உமக்கும் காண்பிக்கிறேன்” என்று சொல்லி சிகரெட்டு புகையை அவள் வாயிலிருந்து ஊதுகிறாள் (சகோ. பிரன்ஹாம் ஊதிக் காண்பிக்கிறார் - ஆசி). பயங்கரமான பார்வை, அப்படிப்பட்டதை நான் கண்டதேயில்லை! அங்கு நின்று கொண்டு அந்த பெண்ணை கவனித்து, அவளுக்குள் இருக்கும் ஆவியை நீங்கள் பகுத்தறிந்தால், அவள் ஒருக்கால் ஏதோ ஒரு சபையின் பாடற் குழுவில் பாடுகிறவளாயிருப்பாள், ஓ, அப்படிப்பட்ட நாளில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நாம் அந்த நாளை அடைந்துள்ளோம் என்பதில் வியப்பொன்றுமில்லை. நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் கிரகித்துக் கொண்ருடிப்பீர்கள் என்று நம்புகிறேன். 52கவனியுங்கள். அது அங்கிருந்தது. சாராள் கூடாரத்தில் தங்கியிருந்து நல்லொழுக்கத்துடன் நடந்து கொண்டாள். ஆபிரகாம் இந்த தூதர்களை உபசரித்தான். அவர், ''நான் திரும்ப உன்னிடத்தில் வருவேன்“ என்றார். சாராள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் நகைத்தாள். அவள், “நான் கிழவியும் என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எங்களுக்கு கணவன் மனைவியுமாக இன்பம் உண்டாயிருக்குமோ?'' என்று சொல்லி நகைத்தாள். அந்த தூதன் தன் முதுகு கூடாரத்தின் பக்கம் திரும்பிய வண்ணம் நின்று கொண்டு, ''சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். ஞாபகம் கொள்ளுங்கள், அதுவே சந்ததிக்கு... இல்லை ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம். அவன் சபைக்கு முன்னடையாளமாக இருக்கிறான். அதுவே அவன் பெற்றுக் கொண்ட கடைசி அடையாளம். அவன் பெற்றுக் கொண்ட அடையாளங்கள் அனைத்திலும், சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்னதாக அவன் பெற்றுக் கொண்ட கடைசி அடையாளம் இதுவே. அது சரியா? கடைசி அடையாளம். 53இஸ்ரவேலர் ஆபிரகாமுக்குப் பின்வந்த சந்ததி. சமாரியர் இரண்டு ஜாதிகள் கலந்து தோன்றிய சந்ததி. அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் அவரை எதிர் நோக்கியிருந்தனர். அவர்கள், ''எங்கள் பிதாவாகிய யாக்கோபு இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்தார்'' என்றனர் - அப்படித்தான் சீகார் ஊரிலிருந்த ஸ்திரீ கூறினாள். பாருங்கள்? ''நம்முடைய பிதாவாகிய யாக்கோபு தமது குமாரனாகிய யோசேப்புக்கு இந்தக் கிணற்றைத் தந்தார். அதிலுள்ள தண்ணீரை நாங்கள் குடித்துக் கொண்டு வருகிறோம். அவர் தமது ஒட்டகங்களுக்கு இந்த கிணற்றிலிருந்து மொண்டு தண்ணீர் வார்த்தார். உம்மிடம் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகின்றீரே?'' என்றாள். பாருங்கள்? மாம்சப் பிரகாரமான இஸ்ரவேல் சந்ததி யாரும் பெற்றுக் கொண்ட கடைசி அடையாளமும் அது போன்ற ஒரு அடையாளமே! வ்யூ! உங்களால் காணமுடியவில்லையா? ஒரு நிமிடம் சிந்தித்துபாருங்கள். உடன்படிக்கை அளிக்கப்பட்ட ஆபிரகாம் பெற்றுக் கொண்ட கடைசி அடையாளம் - வெதுவெதுப்பான சபை புறக்கணிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்பு கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம், தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு இருதயங்களிலும் சிந்தைகளிலும் இருந்த நினைவுகளை அறிந்து கொள்ளுதல் என்னும் அடையாளமே. இஸ்ரவேலர் அறுப்புண்டு போவதற்கு முன்பு கண்ட கடைசி அடையாளமும் அதுவே. அவர்கள், ''அது பெயல்செபூல், குறி சொல்பவன்'' என்றனர். 54இப்பொழுதே அந்த நேரம்! தேவனே, இது மனதில் பதியச் செய்யும் இப்பொழுதே ஆபிரகாமின் சந்ததி பெற வேண்டிய அந்த மணி நேரம் உங்களுக்குப் புரிகின்றதா? தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டு வெது வெதுப்பான சபை அழிக்கப்படுவதற்கு முன்பு, அவர் முன்பு செய்தவாறே அவர்களுக்கு கடைசி அடையாளத்தை அளிக்கிறார். கடைசி லோத்து பின்வாங்கிப் போதலின் கடைசி பிரகாசம் அது ஒரு நிமிடம் ஆழமாக பதியட்டும். ஆபிரகாம், ஒன்று; ஆபிரகாமின் மாம்சப் பிரகாரமான சந்ததி, இரண்டு; ஆபிரகாமின் ராஜரீக சந்ததி, மூன்று. கவனியுங்கள், இந்த செய்தி அங்குள்ள வெதுவெதுப்பான சபையோரிடம் எடுபடாது. முதலில் அவர்களிடம் அது எப்பொழுது சென்றது? அது பெந்தெகொஸ்தேயினருக்கு, தெரிந்துகொள்ளப்பட்டவருக்கு. வெளியே இழுக்கப்படுகிறவர்களுக்கு அனுப்பப்பட்டது. இஸ்ரவேலர் அன்று செய்தது போல், தொண்ணூறுக்கும் எத்தனை இஸ்ரவேலர் அதை ஏற்றுக் கொண்டனர் என்று பாருங்கள். அவர்கள் மேலறைக்கு செல்ல சமயம் வந்தபோது, நாற்பது லட்சம் பேர்களில் நூற்றிருபது பேர் மாத்திரமே சென்றனர். 55இப்பொழுது ராஜரீக சந்ததியை கவனியுங்கள், பாருங்கள், நீங்கள் அதை எங்கு எடுத்து பார்த்தாலும், அது மூன்று முறை வர வேண்டும். காம், சேம், யாப்பேத் சந்ததியார். ஆபிரகாமின் சந்ததி! அங்கு ஆபிரகாம்; மாம்சப் பிரகாரமான சந்ததி; ராஜரீக சந்ததி. எல்லாமே அப்படித்தான். ராஜரீக சந்ததி கிறிஸ்துவின் மூலம் வருகிறது. தேவன் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குத்தத்தத்துக்கு வருகிறோம். இந்த கடைசி நாட்களில் அவர் புதுப்பித்துக் கொண்டிருக்கிற கர்த்தராகிய இயேசுவின் சபையே இந்த ராஜரீக சந்ததி. கவனியுங்கள், அவன் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டான். ராஜரீக சந்ததியே இவ்வுலகில் இருந்த போது, ''லோத்தின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்'' என்றார். ராஜரீக சந்ததி ஆபிரகாமின் சந்ததி, வெளியே அழைக்கப்படுதல்; அவனுடைய சகோதரனாகிய லோத்து, சோதோமில் வெதுவெதுப்பானவன்; பின்பு சோதோமியர், உலகப் பிரகாரமானவர்கள். இன்றைக்கு உலகம், சபை உலகமும், ராஜரீக சந்ததியாரும் அதே விதமாக தங்கள் ஸ்தானங்களில் பொருத்தப்பட்டுள்ளனர். ஒழுங்கின்படி அப்படியே நடக்கிறது. தேவன், தமது வாக்குத்தத்தத்துடன் இறங்கி வந்து அதே காரியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது பரிபூரணமாய் இல்லாமல் போனால் பரிபூரணம் என்பதற்கு அர்த்தம் என்னவென்று தெரியாது. இது வேதப் பூர்வமானது! 56உங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசுதல், ஆவியில் நடன மாடுதல் ஆகியவை உண்டாயிருந்தன. உங்களுக்கு இந்த உணர்ச்சிகள் அனைத்தும் உண்டாயிருந்தன. நீங்கள் சுகமளிக்கும் அற்புதங்களைக் கண்டிருக்கிறீர்கள் - சக்கர நாற்காலிகளிருந்து ஜனங்கள் எழுந்து நடத்தல் போன்றவை. இவையனைத்தும் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இதோ இந்த கடைசி அடையாளம் இப்பொழுது வந்துள்ளது. ஆபிராகாம் தன் வாழ்க்கையில் தேவன் அவனுக்குச் செய்த எல்லாவிதமான காரியங்களையும் கண்டான். நிச்சயமாக, ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு சற்று முன்பு இதோ கடைசி அடையாளம் அவனுக்கு வருகிறது. இப்பொழுது, ராஜரீக சந்ததி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர் நோக்கியிருக்கிறது. அல்லேலூயா! நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர் நோக்கியிருக்கிறோமா? தேவனுடைய குமாரன் திரும்ப வருவாரென்று அல்லேலூயா! ஓ, அது எனக்கு கூச்சலிட வேண்டுமெனும் உணர்வைத் தருகின்றது. கவனியுங்கள் ராஜரீக சந்ததி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர் நோக்கியுள்ளது. ஆபிரகாம் அநேக ஆண்டுகளாக காத்திருந்து வார்த்தையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தது போன்று, ராஜரீக சந்ததியும் செய்து கொண்டு வந்தது. அது இந்த குமாரனின் வருகைக்காக, கர்த்தருடைய வருகைக்காக, முதலாம் ஜாமம், இரண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம், இப்படியாக ஏழாம் ஜாமம் வரையிலும் காத்திருந்தது. இதோ நாம் இன்னும் அந்த ராஜரீக சந்ததியின் வருகையை எதிர்நோக்கியிருக்கிறோம். கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பு நாம் எதைக் காண்கிறோம்? என்ன நடக்கிறது? தேவன் நமது மத்தியில் இறங்கி வந்து ஆபிரகாமிற்கும், ஆபிரகாமின் சந்ததிக்கும் காண்பித்த வண்ணமாக இப்பொழுதுள்ள ராஜரீக சந்ததிக்குக் காண்பிக்கிறார். இதோ அது ராஜரீக சந்ததியிடம் உள்ளது. தேவன் நமது மத்தியில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வாசம் செய்து, முன் காலத்தில் புரிந்த அதே செயலைப் புரிந்து, அது அதுவே என்று காண்பிக்கிறார். 57அந்த புகைப்படத்தின் பேரில் நடத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவாக, உலகம் - விஞ்ஞான உலகம் - அது உண்மையென்று அறிந்துள்ளது. சபையும் அது உண்மையென்று அறிந்துள்ளது, உலகம் முழுவதும். முன்குறிக்கப்பட்ட வித்து ஒவ்வொருவரும் உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றனர் என்றும், கதவு விரைவில் அடைக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு தாக்குவதற்காக காத்திருக்கிறதென்றும் நான் நம்புகிறேன். அது உண்மை. தேவன் எப்பொழுதும் மனிதனுடன் போராடுவதில்லை. அவரால் முடிந்த அனைத்தும் அவர் செய்வார். ஆனால் நண்பர்களே, அந்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கவனியுங்கள். உங்களுக்குதவி செய்ய இப்பொழுது ஒன்றை உங்களுக்கு அளிக்கப் போகின்றேன். அடுத்தபடியாக நடந்தது என்ன? அவர்கள் ராஜரீக சந்ததியை பெறுவதற்கு முன்னதாக, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் சரீரப்பிரகாரமாக ஒரு அற்புதம் நடக்க வேண்டியதாயிருந்தது. அதாவது அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பு, ஆபிரகாமின் சரீரம் செத்து போயிருந்ததாக வேதம் உரைக்கிறது. இல்லையா? சாராளின் கர்ப்பமும் செத்துப் போயிருந்ததாக வேதம் உரைக்கிறது. ராஜரீக சந்ததி... வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் தோன்றுவதற்கு முன்பு சரீரத்தில் ஏதோ ஒரு மாறுதல் நிகழவேண்டியிருந்தது. அவர் என்ன செய்தாரென்று கவனியுங்கள். நான் சிறிய ஒன்றை உங்களுக்கு அளிக்கப் போகின்றேன். 58நாம் வேதாகமத்தைப் படிப்போமானால், அது தேவன் தமது சபைக்கு எழுதி வைத்த அன்பின் கதை. அது தேவன். தேவன் அன்பாயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கல்வியறிவு கொண்டவர்களும் புத்திக் கூர்மையுள்ளவர்களும் தங்கள் மனித ஞானத்தினால் அதைப் புரிந்து கொள்ள முடியாதபடிக்கு வேதாகமம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதைப் புரிந்து கொள்ள நீங்கள் தேவனிடம் அன்பு கொண்டவர்களாயிருக்க வேண்டும். தேவனை நீங்கள் உங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும். அவர் அப்பொழுது தம்மையே உங்களுக்கு வியாக்கியானப்படுத்தித் தருவார். எனக்கு மனைவியுள்ளது போன்று அது. ஓ, நான் எவ்வளவாக அவளை நேசிக்கிறேன் என் முழு இருதயத்தோடும் அவளை நேசிக்கிறேன். நான் வெளிநாடு எங்காகிலும் சென்றிருந்தால் அவள் குழந்தைகளை உறங்க வைத்து பின்பு அவள் எனக்கு கடிதம் எழுதுவாள்... ''அன்புள்ள பில்லி, இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டு, உம்மைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்து, இந்த கடிதத்தை உமக்கு எழுதுகிறேன்“. பாருங்கள், அவள் காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை நான்அறிந்து கொள்வேன். எனக்கு அவளை நன்றாகத் தெரியும். அவளை நான் அதிகமாக நேசிப்பதால், அவளுடைய சுபாவத்தை நான் அறிந்திருக்கிறேன். அவள் என்ன மறைமுகமாக எழுதியிருக்கிறாள் என்பதன் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ளமுடியும். வரிகளினிடையே அடங்கியுள்ள மறைபொருளை நான் அறிந்து கொள்வேன். அது போன்றே தேவனும், தமது சபை வேதாகமத்தை படித்து அதில் அடங்கியுள்ள மறைப் பொருளை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். அதில் இல்லாததொன்றையும் படிக்க வேண்டுமென்றல்ல. நீங்கள் அதைப் படித்து, அதில் அடங்கியுள்ள மறைபொருளை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கவனமாக படித்து, அதில் மறை பொருள் அடங்கியுள்ளதா என்று அறிந்து கொள்ளுங்கள். தேவன் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் அதைச் செய்த போது, அது தமது சபைக்கு உதாரணமாய் அமைந்துள்ளது என்பதைக் காண்பிக்கிறார். அவர்கள் இருவரையும் வாலிப ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றினார். நிச்சயமாக அவர் அப்படி செய்தார். அவர்களை இளமைப் பருவத்துக்கு மாற்றினார் - அவர் ஆபிரகாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யப் போவது போல், நீங்கள் எவ்வளவு வயோதிபமாகவும், தளர்ந்து போன நிலையை அடைந்திருந்தாலும், நீங்கள் மறுபடியும் வாலிபமாகவும் அழகாகவும் மாறப்போகும் நாள் ஒன்று வரப்போகின்றது. அது உண்மை. வாழ்க்கையின் பிரகாசம். 59நான் அண்மையில் மருத்துவர் ஒருவரிடம், “ஐயா நான் ஆகாரம் உண்ணும் ஒவ்வொரு முறையும் என் ஜீவனை புதுப்பித்துக் கொள்கிறேனா என்று என்னிடம் கூறுங்கள்'' என்றேன். அவர், “ஆம் ஐயா. அது சரிதான்” என்றார். நான், ''நாம் பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டோமென்று தேவன் கூறியுள்ளாரே“ என்றேன். அவர், ''அது உண்மை. நாம் உண்ணும் காய்கறிகளும் மாம்சமும் மண்ணில் தோன்றியவையே. அதில் தான் பொட்டாஷம், கால்சியமும் விட்டமின்களும் அடங்கியுள்ளன. நீங்கள் அதை பூமியின் மண்ணிலிருந்து உற்பத்தி செய்கிறீர்கள். நீங்கள் பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கப் பட்டிருக்கின்றீர்கள்'' என்றார். நான், “ஹம், தேவன் துவக்கத்திலேயே அப்படித்தான் சிருஷ்டித்தாரா?'' என்றேன். அவர், ''அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நீங்கள் உண்ணும் உணவு உங்கள் உடலை வளரச் செய்கிறது'' என்றார். நான், “அப்படியானால் நீங்கள் கன்னிகை பிறப்பை சந்தேகிக்கின்றீர்களா?'' என்று கேட்டேன். அவர், “ஆம் ஐயா, நான் சந்தேகிக்கிறேன்” என்றார். நான், ''டாக்டர், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அதை எனக்கு விளக்கிக் தாருங்கள்'' என்றேன். அவர், “விஞ்ஞான ஆதாரம் கொண்டு நிரூபிக்கப்பட முடியாத எதுவும் சரியல்ல'' என்றார். நான், “விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட முடியாத எதுவும் சரியல்ல என்று இப்பொழுது நீங்கள் கூறின கருத்துக்கு எதிராக வாதாட விரும்புகிறேன். வாழ்க்கையில் காணப்படும் உண்மையான காரியங்கள் அனைத்துமே விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட முடியாதவைகளே: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் போன்றவை. இவைகளை விஞ்ஞானப் பூர்வமாக எனக்கு நிரூபித்துக் காண்பியுங்கள் பார்க்கலாம்! இருப்பினும் இவையாவும் தத்ரூபமானவை: தேவன், பரிசுத்த ஆவி, தூதர்கள் போன்றவர்” என்றேன். ஆமென்! நான் தொடர்ந்து, ''விசுவாசம் இவைகளைச் செய்கின்றது. நீங்கள் காணும் ஒவ்வொன்றும் பூமியிலிருந்து அன்னை பூமியிலிருந்து - தோன்றினவையே. அவை பூமிக்கு மறுபடியும் செல்கின்றன. 60“உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் பதினாறு வயதுள்ளவனாயிருந்த போது, இப்பொழுது உண்ணும் உணவையே அப்பொழுது உண்டு வந்தேன். நான் பீன்ஸ், உருளைக் கிழங்கு, ரொட்டி, இறைச்சி ஆகியவைகளை உண்டு வந்தேன். நான் உண்ட ஒவ்வொரு முறையும் பெரியவனாகவும் பலசாலியாகவும் வளர்ந்தேன்”. அவர், ''நிச்சயமாக நீங்கள் உங்கள் ஜீவனை புதுப்பித்துக் கொண்டீர்கள்“ என்றார். நான், ''அப்படியானால், எனக்கு ஏறக்குறைய இருபத்திரண்டு வயதான பிறகு அதைப் பொறுத்த வரையில் அந்த வயதைக் கடந்து எவருமே - எவ்வளவு தான் உணவு உண்டாலும் பலவீனமடைந்து வயதாகிக் கொண்டே செல்கின்றனரே? அதை யோசித்து பாருங்கள். இங்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உள்ளது. என்னிடம் ஒரு டம்ளர் உள்ளது. தண்ணீர் நிறைந்துள்ள இந்த பாத்திரத்திலிருந்து நான் டம்ளரில், அது பாதி நிறையும் வரைக்கும், தண்ணீர் ஊற்றிக் கொண்டே வருகிறேன். அதன் பிறகு டம்ளரின் அடியில் ஒன்றும் இல்லாமல் போனால், நான் எவ்வளவு தான் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருந்தாலும், அது கீழே இறங்கிக் கொண்டே போகின்றது. அது போன்று நான் எவ்வளவு நன்றாக உணவு உண்டாலும், நான் முன்னைக் காட்டிலும் இப்பொழுது நூறு மடங்கு நன்றாக உண்கிறேன்'' என்றேன். இரவு முழுவதும் மாம்சத் தோலைமென்று, காலை உணவிற்கு சோள ரொட்டியும் சிறிது சர்க்கரையும், அதையே மறுபடியும் பகல் உணவாகவும் இரவு உணவாகவும் உண்பது எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியும். வறுமை வாழ்க்கை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இப்பொழுது நான் நன்றாக உண்கிறேன். நான் எவ்வளவு தான் உணவு உண்டாலும், பலவீனமடைந்து வயதாகிக் கொண்டே செல்கிறேன். முடிவில் நான் உலர்ந்து, மரித்து போவேன். ஏன்? ஏன்? அது தேவன் வைத்துள்ள நியமனம், அது உண்மை. ஆம், ஐயா. 61கவனியுங்கள், ஆபிரகாமும் சாராளும் இருபத்திரண்டு அல்லது இருபத்தைந்து வயதுடைய இளமைப் பருவத்தை அடைந்தனர். ஓ, நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, இது அர்த்தமற்றது'' எனலாம். சரி, ஒரு நிமிடம் அமைதியாய் உட்காருங்கள். நாம் மறுபடியும் வரிகளுக்கிடையே அடங்கியுள்ள மறைபொருளைக் காண்போம். அந்த தூதர்கள் புறப்பட்டு சென்று சோதோம் எரிந்து போனவுடனே, ஆபிரகாமும் சாராளும் கேராருக்கு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அது வயோதிப தம்பதிகளுக்கு மிகவும் நீண்ட பயணமே. உங்கள் வரைப்படத்தில் தூரத்தை அளந்து நோக்குங்கள். அவர்கள் கேராருக்கு சென்றனர். இதோ தொண்ணூறு வயது கொண்ட கிழவி சாராள், சிறு வெயில் தொப்பி ஒன்றை அணிந்து, வயதின் காரணமாக அவள் கை கால்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆபிரகாமும் தன் நீண்ட தாடி தொங்கினவனாய் அங்கிருக்கிறான். ''அவர்கள் இருவரும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள் என்று வேதம் உரைக்கிறது. அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என்று கூற முயல வேண்டாம். ''அவர்களுடைய சரீரங்கள் செத்து போய் இருவரும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்'' என்று வேதம் உரைக்கிறது. இதோ அவர்கள் கேராருக்கு செல்கின்றனர், அங்கு அபிமெலேக்கு என்னும் இளம் அரசன் ஒருவன் இருக்கிறான். அவன் தன் இருதயத்துக்கு இனியவள் ஒருத்தியை தேடிக் கொண்டிருந்தான். அவன் சாராளைக் கண்டபோது, அவள் மேல் அன்பு கொண்டான். அது சரியா? கிழவி ஒருத்தியின் மீது?. 62ஆபிரகாம் சாராளை நோக்கி, “நீ மிகவும் அழகாயிருக்கிறாய்”, ஆமென். ''நீ என் சகோதரி என்று அவனிடம் சொல்லிவிடு'' என்றான். அல்லேலூயா! ஆபிரகாமின் சந்ததியாருக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அங்கு காண்பித்தார். சாராள் அழகாயிருந்தாள். ஆபிரகாம் இளைஞனானான். ஆபிரகாம், ''சாராளே, என்ன தெரியுமா, உன் தலையிலுள்ள நரைமயிர் மறைந்து கொண்டிருக்கிறது“ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. சாராளும், “ஆபிரகாமே, உம்முடைய முதுகிலுள்ள கூன் மறைந்து கொண்டிருக்கிறது. நீர் நிமிர்ந்து கொண்டு வருகிறீர் என்றாள். அவர்கள் வாலிப ஆணாகவும் வாலிப பெண்ணாகவும் மாறினார்கள். தேவன் காண்பிக்கிறார்! ஓ, என்னே! 63அபிமெலேக்கு அவள் மேல் அன்பு கொண்டு அவளை அழைத்து வந்தான், அவன் அவளை மணம் புரிந்திருப்பான். அவன் குளித்துவிட்டு வந்து, பைஜாமாவை அணிந்து கொண்டு படுத்து, தன் கால் விரல்களை மேலே உயர்த்தி தன் ஜெபத்தை ஏறெடுத்து, “நாளை நான் இந்த அழகான நூறு வயது கிழவியை மணந்து கொள்வேன்” என்று கூறியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? கேலிக்கூத்து ''அந்த அழகான எபிரெய பெண்ணை'' என்று கூறியிருப்பான். “ஓ, அவளுடைய சகோதரன், அந்த வாலிபன் இவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள்!'' ஆனால் தேவன் சொப்பனத்திலே அபிமெலேக்குக்குத் தோன்றி, ''நீ செத்தாய்'' என்றார். அவன், ''கர்த்தாவே, ஏன்?'' என்றான். அவர், “அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாள்'' என்றார். அவன், “கர்த்தாவே, என் இருதயத்தின் உத்தமத்தை நீர் அறிந்திருக்கிறீர். அவர் என் சகோதரன்” என்று அவள் சொன்னாள். 'அவனும் என் சகோதரி' என்று சொன்னான்“ என்றான். அவர், ''ஆம், உன் இருதயத்தின் உத்தமத்தை அறிந்திருக்கிறேன். ஆகையால் தான் எனக்கு விரோதமாய் பாவஞ் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்'' என்றார். ஆனால் கவனியுங்கள். ''நீ செத்தாய், உன் தேசம் முழுவதும் போய்விட்டது. அவளுடைய கணவன் என் தீர்க்கதரிசி. நீ எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும், நீ எவ்வளவு தான் ஜெபித்தாலும் எனக்கு கவலையில்லை. நான் உன் ஜெபத்துக்கு செவி கொடுக்கமாட்டேன். அவளுடைய கணவன் ஒரு தீர்க்கதரிசி! அவனுடைய மனைவியை கொண்டுபோய் விட்டுவிடும். அவன் உனக்காக வேண்டுதல் செய்வான். நீ அப்படி செய்யாவிட்டால், சாகவே சாவாய்'' என்றார். அல்லேலூயா. 64அது என்ன? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொள்வதற்கென தேவன் சாராளையும் ஆபிரகாமையும் ஆயத்தப்படுத்துகிறார். இந்த கர்த்தருடைய தூதன் தோன்றின பிறகு அடுத்தபடியாக நடக்க வேண்டியது; பரிசுத்த ஆவி தமது கடைசி அடையாளத்தை காண்பித்த பிறகு, அடுத்தப்படியாக நிகழ வேண்டியது, இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொண்டு, நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை, ஆபிரகாமின் ராஜரீக சந்ததியை, சந்திப்பதற்கென ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! நாம் ஒரு நொடிப் பொழுதிலே, ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமாக்கப்பட்டு, அவருக்கு எதிர் கொண்டு போக மேகங்கள் மேல் அவர்களோடு கூட எடுக்கப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனோடே கூட இருப்போம்... அல்லேலூயா!. 65ஓ, நான் அதற்கு வர முடியாது... நான்... நாளை இரவு நான் 22ம் அதிகாரத்துக்கு வருகிறேன், பாருங்கள். ஓ, அதை நான் நேசிக்கிறேன், நீங்களும், இல்லையா? இவைகளைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேதாகமம் இந்த கிருபையுள்ள பொற் கட்டிகளால் நிறைந்துள்ளது. நீங்கள் குனிந்து, அவைகளைக் கையிலெடுத்து, அவைகளின் மேலுள்ள தூசைத் தட்டிவிட்டு, அவைகளைப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் - ஒவ்வொரு மனிதனும் - இயேசு கிறிஸ்துவுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன. தேவத்துவத்தின் பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது. எல்லாமே அவரையே சுட்டிக் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டிலுள்ள அனைத்தும் சிலுவையைச் சுட்டிக் காண்பித்தன. இப்பொழுது புதிய ஏற்பாட்டிலுள்ளவைகளும் பின் நோக்கி சிலுவையையே சுட்டிக் காண்பிக்கின்றன. அது உண்மை. அது அனைத்தும் அங்குள்ளது. ஓ! நமது இருதயங்களை கிறிஸ்துவின் அன்பினால் பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒன்று போன்ற மனதுள்ளவர்களின் ஐக்கியம் மேற் கூறியவாறே இருக்கும் நான் எவ்வளவாக அவரை நேசிக்கிறேன் நான் எவ்வளவாக அவரைக் காண விரும்புகிறேன்! இக்காலை நேரங்களில் ஒன்றில், அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, இருதயம் நொறுங்குண்டு, கிழிக்கப்பட்ட சரீரம் மறுரூபப்படுவதற்காக நான் எவ்வளவு ஆவலோடு காத்திருக்கிறேன் எக்காளம் தொனிக்கும் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள். நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். 66ரெபெக்காள் குளிர்ச்சியான சாயங்கால வேளையில் ஒட்டகத்துக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்தாள். எலியேசர் அவளைக் காலை வேளையில் காணவில்லை. அவளை அவன் பகல் வேளையில் காணவில்லை. அவன் சாயங்கால வெளிச்சத்தில் அவளைக் கண்டான். “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்''. உண்மை! அப்பொழுது தான் அவன் அவளைக் கண்டான். அவள் முகத்தை முக்காடிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தலையில்லை. அவள் தன் தலையிடம் சென்று கொண்டிருந்தாள். ஆமென். ஒரு ஸ்திரீயின் சுபாவம், அவளை முற்றிலும் ஒரு மனிதனிடம் ஒப்படைப்பதே. அது போன்று சபையின் சுபாவமும் தன்னை கிறிஸ்துவிடம், அவருடைய சித்தத்துக்கு ஒப்புக் கொடுப்பதே. நீங்கள் ஒப்புக் கொடுங்கள் அவளுக்கு சொந்த கருத்து எதுவுமில்லை. அவள் அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறாள், வேறொருவருடைய வார்த்தையை அல்ல, ஏவாள் மாத்திரம் அவ்வாறு செய்திருந்தால், நாம் மரிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது; ஆனால் அவளோ யோசனைக்கு செவிகொடுத்தாள். ஆனால் கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி வார்த்தையாகிய கிறிஸ்துவின் தலைமையை ஏற்றுக் கொண்டு தேவனுடைய வார்த்தையை மாத்திரமே விசுவாசிப்பாள். அவள்தான் உண்மையான மீட்டெடுக்கப்பட்ட மணவாட்டி. நண்பர்களே, நேரம் சமீபமாகிவிட்டது. நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. நாம் சாயங்கால வேளையில் இருக்கிறோம். பரிசுத்த ஆவி இன்றிரவு இங்கிருக்கிறார். இது ஒரு சிறு கூட்டம் என்றறிவேன். 67''ஓ அப்படிப்பட்ட ஒன்று நிகழுமானால், தேவன் அதை ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவருக்கும் பேராயர்களுக்கும் வெளிப்படுத்துவார். அவர் மெதோடிஸ்டு பேராயரிடம் செல்வார். அவர் பாப்டிஸ்டு வேதாகமப் பள்ளிக்கு வருவார். அவர்...“ என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆம், அப்படித்தான் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவர் ஒருக்காலும் அப்படி செய்ததில்லை. அவர் அவரை எதிர்நோக்கியிருக்கும் தாழ்மை இருதயம் கொண்டவர்களிடம் வருகிறார். இன்றிரவு அவர் இங்கிருக்கிறார் - பரிசுத்த ஆவி, தேவன், அதே தூதன், விஞ்ஞானிகளின் முன்னிலையில் தம்மை நிரூபித்தவர், எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படம் அதோ உள்ளது. கைரேகை தஸ்தாவேஜுகளை ஆராயும் புலனாய்வுத்துறை தலைவர் ஜார்ஜ் ஜே. லேஸி என்பவர், ''ஒளி புகைப்படக் கருவியின் லென்ஸின் (lens) மேல்பட்டது என்றார். அவர். ''திரு. பிரன்ஹாமே, நீர் மனோதத்துவத்தினால் ஜனங்களின் மனதிலுள்ளதை அறிகிறீர் என்று நானே பலமுறை கூறியுள்ளேன். ஆனால் புகைப்படக் கருவியின் இயந்திரக் கண் மனோதத்துவத்தை புகைப்படம் எடுக்காது. ஒளி லென்ஸின் மேல் பட்டது. அது அங்கிருந்தது!'' என்றார். அந்த படம் அங்குள்ளது, அவைகளில் ஒன்று வாஷிங்டன் டி.சி.யில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது பதிப்புரிமை (copy righted) செய்யப்பட்டு “விஞ்ஞானப் பூர்வமாக புகைப்படம் எடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றே ஒன்று” என்று உறுதி கூறப்பட்டுள்ளது. 68இன்றிரவு நான் மரிக்க நேரிட்டு, நாளை இரவு இந்த பிரசங்க பீடத்தில் என்னால் பிரவேசிக்க முடியாவிட்டால், நான் கூறின வார்த்தைகள் சத்தியமே. ஏனெனில் அவை என் வார்த்தைகள் அல்ல, அவை அவருடையவை. ''நான்'' என்று நான் எப்பொழுதுமே கூறினதில்லை. அது நானல்ல. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் உங்களைப் போல் ஒருவன். கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவி. ஆனால் தேவன், இந்தக் கடைசி நாட்களுக்கென இவைகளை வாக்குத்தத்தம் செய்தார், இதோ அவை இங்குள்ளன! அது தேவனுடைய வார்த்தை. அது ஒரு கட்டுக் கதையாக இருந்தால், ஒருக்கால் வேறுவிதமாக இருக்கும். ஆனால் அது வார்த்தையென்று தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நிரூபிக்கப்பட்டு, வேதாகமம் முழுவதும் அதை உறுதிப்படுத்துகிறது. விஞ்ஞானிகளால் அது உறுதிப்பட்டுள்ளது. ஆவியினால் அது உறுதிப்பட்டுள்ளது! சபையினால் அது உறுதிப்பட்டுள்ளது! தேவன் நமது மத்தியில் இருக்கிறாரென்று அல்லேலூயா! அது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நேற்றிரவு நீங்கள் எழுந்து நின்று தேவனுக்காக அந்த உறுதி கொண்டதைக் குறித்து உங்களுக்கு சந்தோஷம்தானே? அது உங்களுக்கு வித்தியாசமான உணர்ச்சியை அளித்ததல்லவா? நீங்கள் தேவனுடைய வார்த்தைக்காக உறுதியாய் நிற்கும் போது எப்பொழுதும் அப்படிதான் உண்டாகின்றது. கிறிஸ்துவுக்காக நில்லுங்கள்! அதைக் குறித்து வெட்கப்படாதீர்கள். 69ஜெபம் செய்வோம்: இன்றிரவு இங்குள்ள யாராகிலும் சிறிது நேரம் இப்பொழுது கையுயர்த்தி, “சகோ. பிரன்ஹாமே, என்னை உங்கள் ஜெபத்தில் நினைவு கூருங்கள். நான் ஆபிரகாமின் சந்ததியாரில் ஒருவனாக இருக்க மிகவும் ஆவல் கொள்கிறேன். நான் பரலோகத்தை இழக்க விரும்பவில்லை. சகோ. பிரன்ஹாமே, ஜெபியுங்கள். என் இருதயத்தின் ஆழத்தில் எப்பொழுதுமே நான் தேடிக் கொண்டிருந்த ஒன்று இருந்ததாக உணருகிறேன். ஆனால் அது எனக்குக் கிடைக்கவேயில்லை. சகோ. பிரன்ஹாமே, தேவன் அதை எனக்குக் கொடுக்க வேண்டுமென்று எனக்காக ஜெபியுங்கள்” என்று கூற விரும்புகிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லாவிடங்களிலும் உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாடியின் முன்பாகத்தில் உள்ளவர்களைக் குறித்தென்ன? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் கீழே எவ்வளவு பெரியவரோ, அவ்வளவு மாடியின் முன் பாகத்திலும் பெரியவர். நீங்கள் உண்மையாகவே உத்தமமாயுள்ளீர்களா? உறுதியாக அதை நம்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் கையையுயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். உங்கள் தலைகள் வணங்கியிருக்கட்டும். இன்றிரவு இங்குள்ள பாவிகள் யாராகிலும் தங்கள் கரங்களையுயர்த்தி, ''கர்த்தாவே, என்னை நினைவுகூரும். நான் போதகரிடத்தில் என் கையையுயர்த்தவில்லை, நான் உம்மிடம் என் கையையுயர்த்துகிறேன். நீர் இன்று உயிரோடிக்கிருக்கிறீர் என்றும், நீர் மரிக்கவில்லை என்றும், இல்லை, நீர் மரித்து உயிரோடெழுந்தீர் என்றும் நான் உண்மையாக விசுவாசிக்கிறேன். நீர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறீர். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். நீர் இங்கிருக்கிறீர் என்று நான் விசுவாசிப்பதினால், என் கையை உம்மிடம் உயர்த்துகிறேன்'' என்று கூற விரும்புகிறீர்களா? உங்கள் கையையுயர்த்தி, ''என்னை நினைவு கூரும், கர்த்தாவே'' என்று சொல்லுங்கள். ஜெபித்துக் கொண்டேயிருங்கள். தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். பின்வாங்கிப் போனவரா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்கள் கையை காண்கிறார். 70எங்கள் பரலோகப் பிதாவே, இந்த கைகளை நீர் காண்கிறீர். அவைகளுக்குப் பின்னால் என்ன உள்ளதென்றும் நீர் அறிந்திருக்கிறீர். நீர், “விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். சில விதைகள் வழியருகே விழுந்தன. அதனால் எவ்வித உபயோகமும் உண்டாகவில்லை. சில விதைகள் கற்பாறையில் விழுந்தன; சில விதைகள் முட்களில் விழுந்தன; சில விதைகள் நூறத்தனையாக பலன் கொடுத்தன'' என்றும் கூறியுள்ளீர். விதைகளை விதைக்கும் பொறுப்பு மாத்திரமே விதைக்கிறவனுக்கு உரியது. கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுதே அந்த விதையை பிடித்துக்கொள்ளட்டும். கர்த்தாவே, நாங்கள்... நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நாங்கள்... நீர் எப்பொழுது வரப்போகிறீர் என்று எவருமே அறியார். எங்களுக்கு அது தெரியாது. நீர், ''அதை தேவ தூதர்களும் அறியார்கள்; பிதா ஒருவர் மாத்திரமே அதை அறிவார்'' என்று கூறியுள்ளீர். இயேசுவும், அது அவருக்கும் கூட தெரியாது. பிதா ஒருவருக்கு மாத்திரமே அது தெரியும் என்று கூறியுள்ளார். இப்பொழுதும், பிதாவே, இங்கு கைகளையுயர்த்தினவர்கள், உண்மையாகவே உயர்த்தினர் என்று நான் நம்புகிறேன். ஏதோ ஒன்று - ஒரு ஆவி - அவர்களுக்குப் பின்னால் இருந்துக் கொண்டு, அவர்களை கைகளையுயர்த்தும்படி தூண்டினது. அவர்கள் அதை உத்தமமாய் செய்தனர். ஒருக்கால் நீர் அவர்களிடம் பேசினது இதுவே முதன் முறையாயிருக்க வகையுண்டு. ஒருக்கால் இதுவே கடைசி முறையாக இருக்கலாம். மற்ற சமயங்களில் ஒருக்கால் பேசியிருக்கக் கூடும். ஒருக்கால் நீர் மறுபடியும் அவர்களிடம் பேசாமல் இருந்துவிடலாம். எனக்குத் தெரியாது, பரலோகப் பிதாவே, விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நீர் இரட்சிப்பை அருள்வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். 71உம்முடைய பரிசுத்த நாமம் ஜனங்களின் முன்னால் பய பக்தியாய் கொண்டு வரப்பட்டு, பரிசுத்த ஆவியினால் தேவ அன்பு ஒவ்வொரு இருதயத்திலும் ஊற்றப்படுவதாக. கர்த்தாவே, இந்த போதகர் சகோதரரை ஆசீர்வதியும். இங்குள்ள இந்த விலையுயர்ந்த மனிதர் போராட்டத்தின் மத்தியில் எனக்கு எப்படியோ அழைப்பு விடுத்தனர். கூட்டத்துக்கு வந்துள்ள ஜனங்களை ஆசீர்வதிப்பாராக. நான் கர்வம் பிடித்தவனாயிருக்க வேண்டுமென்றோ, அல்லது வித்தியாசமாயிருக்க வேண்டுமெனும் எண்ணம் எனக்கில்லை, கர்த்தாவே. நான் உண்மையுள்ளவனாகவே இருக்க விரும்புகிறேன். ஒரு மனிதனுக்குள் இருக்கும் சத்தியத்தை மாத்திரமே நீர் அடையாளம் கண்டுக் கொள்கிறவராயிருக்கிறீர். ஏனெனில் நீரே சத்தியம். பிதாவே, இப்பொழுது செவிகொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இன்றிரவு அநேகர் ஒருக்கால் கைகளையுயர்த்தாமல் இருந்திருக்கலாம். அவர்கள் எப்படியாவது இரட்சிக்கப்படும்படி அருள் புரிவீராக. இயேசுவின் நாமத்தில் இதை அருளும். ஆமென். 72நாம் சிறிது நேரம் பயபக்தியாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்; ஜெப வரிசையை அமைக்க சற்று தாமதமாகிவிட்டதென்றும் நினைக்கிறேன், இருப்பினும் அதை நாம் அமைப்போம். ஒவ்வொரு நபரும், உங்கள்... உங்களிடம் ஜெப அட்டை இருந்தால், அதை கையில் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் ஜெப அட்டை இல்லாமல் போனால், ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள். நாம்... நாம் கூடுதலாக இங்கு ஐந்து நாட்கள் தங்க வேண்டுமெனும் நிலை ஏற்பட்டாலும், நாங்கள் தங்கியிருந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபம் செய்யப் போகின்றோம். அது உண்மை. நான் ஜனங்களிடம் ஒரு செய்தியை அளிக்க முயன்று கொண்டிருக்கிறேன். நீங்கள் முக்கியமான அம்சத்தைக் காண வேண்டுமென்று நான் முயன்று கொண்டிருக்கிறேன்... நீங்கள் சுகமடைந்து, ஒருக்கால் நீண்ட காலம் வாழ நேரிட்டால், எப்பொழுதாகிலும் இரட்சிக்கப்பட்டால், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். பாருங்கள்? நீங்கள் சுகமடைந்து, உங்கள் வழியில் சென்று, இரட்சிப்பை இழக்கக் கூடும். இல்லை, உங்கள் உயிரை இழக்கக்கூடும்; ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும் போது, நித்திய ஜீவனைப் பெற்று கொள்கின்றீர்கள், அங்கு நீங்கள் ஒருபோதும் வியாதிப்படுவதில்லை. 73இன்றிரவு நான் பேசிக் கொண்டிருந்தது உங்களுக்குப் புரிந்ததா என்று வியப்புறுகிறேன். அதாவது தேவன் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் தரிசனமாகி, அழிவு வருகிறதற்கு முன்பும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் கொடுக்கப்படுவதற்கு முன்பும் அந்த கடைசி அடையாளத்தைக் கொடுத்தார் அந்த தூதன். சபைக்கோ வரப்போகும் குமாரன் தான் அந்த அடையாளம். உலகிற்கோ அது அழிவு. அவர் ஆபிரகாமுக்கும் மற்றவர்களுக்கும் செய்தது உதாரணங்கள். ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாகிய இயேசு இவ்வுலகில் வந்து அதே அடையாளத்தைச் செய்தார். எத்தனை பேருக்கு அது தெரியும்? “ஆமென்” என்று சொல்லுங்கள். (சபையோர் “ஆமென்” என்கின்றனர்- ஆசி). நிச்சயமாக, அவர்கள் அதை புறக்கணித்தனர். அது சரியா? இயேசு அதை புறஜாதிகளின் மத்தியில் செய்யவில்லை, ஏனெனில் ராஜரீக சந்ததி தோன்றவில்லை, சபை இன்னமும் பிறக்கவில்லை. ஆனால் சபை பிறந்து இப்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டன... ஞாபகம் கொள்ளுங்கள். அது ஆபிரகாம் காத்திருந்ததன் முடிவில். அது மாம்சப் பிரகாரமான சந்ததி மேசியாவுக்காக காத்திருந்ததன் முடிவில். ஏனெனில் மேசியா அங்கிருந்தார். 74இது ராஜரீக சந்ததி காத்திருத்தலின் முடிவாகும். அவர் இங்குள்ளார், கிறிஸ்து பிரசன்னமாகுதல். இவ்விரண்டையும் நீங்கள் வித்தியாசப்படுத்தினதுண்டா... வேதாகமத்தில் ஒரு இடம் உண்டென்று உங்களுக்குத் தெரியுமா? அதைப் பார்க்க எனக்கு இப்பொழுது நேரமில்லை. அது “கிறிஸ்துவின் பிரசன்னமாகுதல்” (appearing) என்றும் “கிறிஸ்துவின் வருகை” (coming) என்றும் அழைக்கிறது. இவையிரண்டும் வித்தியாசமானவை. அவர் இப்பொழுது பிரசன்னமாகி, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நமது மத்தியில் கிரியை செய்துக் கொண்டு சபையை பரிபூரணப்படுத்திக் கொண்டிருக்கிறார். அது அப்படிதான் இருக்கவேண்டும். உங்கள் ஜோபியில் ஒரு டாலர் நோட்டு இருக்குமானால், அதை வெளியே எடுத்து நோக்குங்கள், அதன் ஒரு பாகத்தில் அமெரிக்க முத்திரை உள்ளது. மறுபக்கத்தில் எகிப்திய முத்திரை, அதாவது கூர்நுனிக் கோபுரம். அதன் தலைக்கல் அதற்கு மிகவும் உயரத்தில், ஒரு கண் அதைப் பார்ப்பது போல் உள்ளது. அதற்கு கீழ் “மகத்தான முத்திரை” என்று ஏன் அமெரிக்கா டாலரில் எழுதியிருக்க வேண்டும்? அமெரிக்க முத்திரை தான் மகத்தானதாய் இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ, அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதை மகத்தான முத்திரையாக அங்கீகரித்துள்ளனர். அந்த கூர்நுனிக் கோபுரம் குறுகிக் கொண்டே செல்வதைக் கவனியுங்கள். சபையின் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அதன் பிறகு அது கூராக வேண்டும்... தலைக்கல் கூர்நுனிக் கோபுரத்துக்கு வரவேயில்லை. அது புறக்கணிக்கப்பட்டது மூலைக் கல்லைப் போன்றே, ஆனால் தலைக்கல் வரும் போது... நான் கூர் நுனிக் கோபுரத்தை சென்று பார்த்திருக்கிறேன். அது பரிபூரணமாய் பொருந்தி அதற்கிடையில் ஒரு சவரக் கத்தியும் கூட உங்களால் நுழைக்க முடியாது. அங்குதான் காரை (Razor Blade Mortar's) உள்ளது. சபை வரும்போது... கிறிஸ்து சபையை பெற்றுக்கொள்ள வரும்போது, அதே போன்ற ஒரு ஊழியத்தை அது பெற்று, அந்த கிருபையின் மூலம் எல்லாவற்றையும் எழுப்பி, பிறகு சென்றுவிடும். தலைக் கல் வருதல்; ''கர்த்தருக்கு கிருபையுண்டாவதாக“ என்று ஆர்ப்பரித்தல். 75என் மனதில் ஒன்றுள்ளது. அல்லேலூயா நமது தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார். அவருடைய இரகசியங்களை அவர் தமது ஊழியக்காரருக்கு வெளிப்படுத்துகிறார். தம் முதுகை கூடரத்துக்குப் பக்கம் திரும்பினவராய் கூடாரத்திலுள்ள சாராள் தன் உள்ளத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அறிவித்த தூதனைக் குறித்து உங்களிடம் கூறினேன். அந்த தூதன் இப்பொழுது இங்கிருக்கிறார் - பரிசுத்த ஆவி. அதே அக்கினி ஸ்தம்பம், கிறிஸ்துவுக்குள்ளிருந்த அவரே - என்று நான் உரைக்கிறேன். அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தினது. அந்த அக்கினி ஸ்தம்பம் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணினார். அவர், ''நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். மறுபடியும் தேவனிடத்துக்குப் போகிறேன்'' என்றார். அவருடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, அவர் சவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தார். ஒரு ஒளி அவனைத் தாக்கி கீழே விழத் தள்ளியது. அவன், “ஆண்டவரே! ஆண்டவரே!'' என்றான். அவர் முதலில்''சவுலே, சவுலே'' என்றார். “என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?'' என்றார். அவன், ''ஆண்டவரே, நீர் யார்?“ என்றான். அவர், ''இயேசு நானே'' என்றார். அவர் திரும்பப் போய்விட்டார்! 76இன்றிரவு அவர் இங்குள்ளார், அவர் தமது சபையினாலும் விஞ்ஞான ரீதியாகவும் மற்றெல்லா விதமாகவும் நிரூபிக்கப்பட்டுவிட்டார்! ஓ, நண்பர்களே, நாம் ஏன் இவ்வளவு மந்தமாக இருக்கிறோம்? நாம் ஏன் உட்கார்ந்து தலையைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறாம்? வார்த்தையை உரைத்த தேவன், அந்த தேவன்... எலிசா எலியாவின் ஆவியை இரட்டிப்பாக பெற்றவனாய் திரும்பி வந்து, சால்வையை மடக்கி, ''எலியாவின் தேவன் எங்கே?'' என்று கூறினது போன்று வார்த்தையை எழுதின தேவன் அதை உறுதிப்படுத்தித் தரட்டும்! இது அவருடைய வார்த்தையாயிருக்குமானால், அவர் அதை ஆதரிக்கட்டும்! அதை செய்வதாக அவர் வாக்களித்துள்ளார். நாம் விசுவாசித்தால் அவர் செய்வார். இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் அந்த நபர் அல்ல. நான் அந்த நபருக்கு ஊழியக்காரன். நீங்களும் கூட, நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராக இருந்தால். 77ஸ்தாபனங்கள் அனைத்தும் என்னைப் புறக்கணித்து ஒவ்வொரு இடத்திலும் ஸ்தாபனங்கள் என்னை உதைத்து வெளியே தள்ளிவிட்ட இந்த நாளில், நான் உறுதியாக நின்று வார்த்தையைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். வெளிச்சத்தைக் காணும் அந்த ஸ்தாபனங்களிலுள்ள விலையேறப்பெற்ற சகோதரர்கள், அவர்களுடைய தலைமை அலுவலகம் என்ன கூறின போதிலும், அதில் உறுதியாய் நிற்பார்கள். அப்படிப்பட்ட மனிதரை தேவன் ஆசீர்வதிப்பாராக. நேற்றிரவு எழுந்து நின்ற மனிதரையும் ஸ்திரீகளையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. நான் உங்களுக்காக என்ன செய்யவேண்டும்? ஏதாவதொன்றை என்னிடம் கேளுங்கள். நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறுங்கள், என்னால் முடிந்த எதையும் நான் உங்களுக்குச் செய்வேன். நீங்களும் தேவனுடைய ஜனங்கள். போராட்டத்தின் மத்தியில் அவ்வாறு நின்ற எந்த மனிதன் அல்லது ஸ்திரீயின் பேரிலும் எனக்கு மதிப்புண்டு. 78இப்பொழுது அந்த தூதன்... சோதோமில் நிகழ்ந்த அதே காரியம் மனுஷ குமாரனின் வருகைக்கு முன்னதாக சபையில் நடக்கும் என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தை முன்னுரைத்திருக்குமானால், அவர் காட்சியில் வரட்டும். நான் என் முதுகை திருப்பிக் கொள்கிறேன். நீங்கள் தலை வணங்கி ஜெபித்து கொண்டிருங்கள். நான் ஏவப்படாதிருந்தால் இதை நான் கூற மாட்டேன். அப்படிப்பட்ட ஒன்றைக் கூறுவதற்கு நான் மூடனாயிருப்பேன். ஆனால் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை விசுவாசித்து, அவரே வார்த்தை என்று நான் விசுவாசிக்கும் காரணத்தால் நாம் வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் போது அது நமது மாம்சத்தில் தத்ரூபமாகிவிடுகிறது. ஏனெனில், ''உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுக்குள்ளே இருப்பேன். நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்பது அவருடைய வாக்குத்தத்தமாயுள்ளது. 79பரலோகப் பிதாவே, இந்த செய்தியை நான் பிரசங்கித்த கூட்டத்தினருக்கு என் முதுகை திருப்பிக் கொண்டேன். தேவனே, நீர் இன்னும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறீர் என்றும், நீர் இன்னும் யேகோவா தேவனாயிருக்கிறீர் என்றும் இன்றிரவு அறியப்படட்டும் என்று உம்மை வேண்டிக் கொள்கிறேன். அன்று கூடாரத்தினருகே ஆபிரகாமுடன் பேசி கொண்டிருந்தவர் நீரே. கூடாரத்தில் அந்த ஸ்திரீ தன் உள்ளத்தில் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்று பகுத்தறிந்து அவளிடம் கூறினது நீரே. அவள் அதை மறுதலித்த போது, நீர் அவளுடைய உயிரை எடுத்திருக்கலாம். ஆனால் கர்த்தாவே, அவள் ஆபிரகாமின் பாகமாக, அவனுடைய மணவாட்டியாக இருந்தாள். எங்கள் அவிசுவாசத்துக்காக நீர் எங்களுடைய உயிரையும் எடுத்திருக்கலாம், ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் பாகமாயிருக்கிறோம். ஆபிரகாமை புண்படுத்தாமல் நீர் சாராளின் உயிரை எடுத்திருக்க முடியாது. அவ்வாறே கிறிஸ்துவை புண்படுத்தாமல் நீர் சபையின் உயிரை எடுக்க முடியாது. கர்த்தாவே எனக்குதவி செய்யும். எனக்கு படிப்பு கிடையாது. நான் வெறும்... கர்த்தாவே, எனக்கு ஒன்றுமில்லை, நான் உம்மை விசுவாசிக்க மாத்திரம் செய்கிறேன். நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, உதவி செய்யும். 80(ஒரு சகோதரி அந்நிய பாஷை பேசுகிறாள். வேறொரு ஸ்திரீ அதற்கு அர்த்தம் உரைக்கிறாள் - ஆசி). ஆமென். ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் பிரசன்னமாயிருக்கிறார். பயபக்தியாயிருங்கள், மரியாதைக் கொடுங்கள். உங்களுக்கு விருப்பமானால், உங்கள் தலையை உயர்த்தலாம். அது மாத்திரமல்ல... பாருங்கள், அந்நிய பாஷை பேசுதல் உங்களுக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறது, அதற்கு அர்த்தம் உரைக்கப்படாமலிருந்தால், அர்த்தம் உரைக்கப்பட்டால், அது சபைக்கு தீர்க்கதரிசனமாக அமைகிறது. இப்பொழுது அர்த்தம் உரைக்கப்பட்டதை நான் எப்படியும் புரிந்துக் கொண்டேன் என்றால், “கர்த்தரை விசுவாசியுங்கள், வார்த்தையை அனுப்பினவர் அவரே என்று விசுவாசியுங்கள்”. நான் என் சுய நாமத்தில் வரவில்லை, நான் அவருடைய நாமத்தில் வருகிறேன். அப்படியானால் அவருடைய வார்த்தையை என் மூலம் பிரசங்கித்து, அந்த வார்த்தையை உறுதிப்படுத்தி, என் மூலம் தமது கிரியைகளைச் செய்வார். நிச்சயமாக. அதை நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அவ்வாறே விசுவாசிக்கின்றீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர்... ஆசி). எத்தனை பேர் அதை இப்பொழுது விசுவாசிக்கின்றீர்கள்? அவர் செய்வதற்கு முன்பு... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படிதான், அப்படித்தான். உங்கள் விசுவாசத்தை அதே மட்டத்தில் வைத்திருங்கள். அப்பொழுது ஏதோவொன்று நிகழுவதைக் காண்பீர்கள். 81நான் என் முதுகை கூட்டத்தினரிடம் திருப்பிக் கொள்ளப் போகின்றேன். ஏனெனில் அதற்குச் சாட்சியாக இப்பாழுது பரிசுத்த ஆவியானவர் உரைத்தார். பாருங்கள்? நீங்கள் பெலன் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்திருங்கள். கூட்டத்திலுள்ளவர்களே நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? என்னால் ஒருவரையும் காண முடியவில்லை. அங்குள்ள உங்களில் எத்தனை பேர் வியாதிப்பட்டும் அவதியுற்றும் இருக்கின்றீர்கள், அல்லது அவதியுற்றவர்களை கொண்டு வந்திருக்கிறீர்கள். அல்லது யாருக்காகிலும் ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்களா? எனக்கு அதை குறித்து ஒன்றுமே தெரியாதென்று நீங்கள் அறிவீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஏறக்குறைய எல்லாவிடங்களிலும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளதென்று எண்ணுகிறேன். நல்லது. இப்பொழுது நாம் விசுவாசிப்போம். யாரும் எழுந்து போக வேண்டாம். எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். இப்பொழுது பத்து மணிக்கு பன்னிரண்டு நிமிடங்கள் உள்ளன. எனக்கு பன்னிரண்டு நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள். கொடுப்பீர்களா? யாரும் நகர வேண்டாம், யாரும் எழுந்து போக வேண்டாம், இப்பொழுது மிகவும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருங்கள். ஒரே முறை, உங்கள் இருதயத்தை திறந்துக் கொடுங்கள். 82(ஒரு சகோதரன்அந்நிய பாஷை பேசுகின்றார் வேறொரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார் - ஆசி). ஆமென். நன்றி, கர்த்தாவே, உமக்கு நன்றி. பயபக்தியுடன் அதற்கு நாம் முழு இருதயத்தோடும் மதிப்பு கொடுக்கிறோம். இது சபையினுடைய வரமாயிருக்கிறது. ஜெபத்தில் தரித்திருங்கள், பயபக்தியாக. அவர்கள் ஒருமுறை யுத்தத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, இந்த பெரிய யுத்தத்தை எவ்விதம் சந்திக்கப் போகின்றனர் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தாவீது அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் பங்கிட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இறைச்சித் துண்டையும் ஒரு படி திராட்சரசத்தையும் கொடுத்தான். அப்பொழுது ஆவி ஒரு மனிதனின் மேல் இறங்கினது, அவன் சத்துருவை எங்கு சந்திக்க வேண்டுமென்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அது அப்படியேயாயிற்று. சகோதரனே, நாமும் ஒரு பெரிய யுத்தத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் பெரிய யுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஆவி ஒருவர் மேல் இறங்கி, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று - அதாவது, நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று உங்களிடம் உரைத்தது. அது நான் என்னும் உங்கள் எண்ணத்தை அகற்ற அவர் முயன்றுக் கொண்டிருக்கிறார். பாருங்கள்? உங்களில் சிலர், சகோ. பிரன்ஹாம் ஏதோ ஒன்றைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்று எண்ணியிருப்பீர்கள். அது நானல்ல, அது அவர். நான் வெறும்... வரம் என்பது உங்களைப் பரிபூரணமாய் அர்ப்பணித்தலாகும், வாகனப் பல்சக்கரத்தை (gear) மாற்றுவது போல். அது இந்த ஒலிபெருக்கியைப் போன்றது. அதை நீங்கள் இயக்கும் போது, அதன் வழியாக யாராகிலும் பேச வேண்டும். அது நான் மாற்றும் ஒரு சிறு பல் சக்கரத்தைப் போன்றது. பரிசுத்த ஆவி... நான் அதை மாற்றுவதில்லை, அவரே அதை மாற்றுகிறார். அதன் பின்பு அவர் பேசுகிறார். அது நானல்ல. இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் பயபக்தியாய் விசுவாசியுங்கள். ஜெபித்துக் கொண்டிருங்கள்! 83வேதாகமம், “இயேசு கிறிஸ்து நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராயிருக்கிறார்” என்று கூறியுள்ளதென்றும் நாம் அனைவருமே அறிவோம். அது உண்மையானால் சபையோர் “ஆமென்'' என்று கூறட்டும் (சபையோர் ''ஆமென்” என்கின்றனர் - ஆசி). அவர் அதே பிரதான ஆசாரியரா? ''ஆமென்'' என்று சொல்லுங்கள் (“ஆமென்” அவர் அதே பிரதானஆசாரியராயிருந்தால், அவர் அதே விதமாக நடந்து கொள்வார். அது சரியா? (“ஆமென்''). ஆமென் இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னைத் தொடுவதனால் ஒரு உபயோகமில்லை. நான் ஒரு மனிதன். ஆனால் அவரைத் தொடுவீர்களானால், இங்குள்ள பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்து மனித உதடுகளை உபயோகிக்கிறார். ஏனெனில் அவர் திராட்சைக் செடி, நாம் கொடிகள். அவரில் கனி உண்டாவதில்லை. அவர் கொடிகளுக்கு சத்து அளிக்கிறார். என் முதுகை நான் திருப்பிக் கொள்கிறேன், அப்பொழுது நான் கூறினவைகளை உங்களால் காணமுடியும்... 84மேடையின் மேலுள்ள இந்த போதகர்கள் இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் விரும்பினால் என்னைப் பார்க்கலாம், அதனால் பரவாயில்லை. நீங்கள் காண்பதற்காக, நீங்கள் அறிந்து கொள்வதற்காக... ஏனெனில் நீங்கள் தான் மேய்ப்பர், நீங்கள் தான் இந்த செம்மறி ஆடுகளுக்குப் போதகராயிருக்கின்றீர்கள். நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக. சகோதரரே, நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில் நான் என்னவாயிருக்கிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா? நீங்கள் சேவிக்கிற அதே கிறிஸ்துவின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். நான் உங்கள் சகோதரன், ராஜ்ஜியத்தில் சகோதரராகிய உங்களுடன் உடன் குடிமகனாயிருக்கிறேன். நான் இங்கு... பாருங்கள், இப்பொழுது நான் பிரசங்கித்த வார்த்தை ஆபத்தில் உள்ளது. அது இப்பொழுது தோல்வியடைவதைக் காண வேண்டுமென்று சாத்தான் விரும்புவான். அதைத்தான் அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் தேவனோ தோல்வியடைபவர் அல்ல. பயபக்தியாயிருங்கள். 85இப்பொழுது என் முதுகு திருப்பப்பட்ட நிலையில், யாராகிலும் ஒருவர். அதை நான் திருப்பட்டும், ஜனங்கள் சுற்றிலும் எல்லா பக்கங்களிலும் உள்ளனர். முதலில் இந்த பாகத்துக்கு நான் திரும்பட்டும், பிறகு மற்ற பாகம் நான் திரும்புவேன். இப்பொழுது இந்த பாகத்திலுள்ளவர்கள் அநேகர் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பாகத்திலும் கூட, தேவனை விசுவாசிக்க விரும்புகிறவர்கள் யாராகிலும் இருந்தால், ஜெபியுங்கள். பின்பக்கத்திலுள்ள யாராகிலும், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்பொழுது, பரலோகப் பிதாவே, உம்முடைய எல்லா செய்திகளிலும் உம்மை நான் மெச்சுகிறேன் - நீர் செய்த எல்லாவற்றிற்காகவும். கர்த்தாவே, இப்பொழுது எனக்குதவி செய்யும். நான்... விசுவாசத்தினால், உம்மையும் உம்முடைய வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். இதை செய்ய உம்முடைய ஆவியானவர் என்னை அழைத்தார் நான் விசுவாசிக்கிறேன். நான் சத்தியத்தை உரைத்தேன் என்று அறியப்படட்டும். உம்மைக் குறித்து நான் சாட்சிக் கொடுத்தேன், கர்த்தாவே நான் உண்மையைக் கூறினேன் என்று நீர் இப்பொழுது சாட்சி பகரும். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென். 86(ஒரு சகோதரி வேறொரு பாஷையில் பேசுகிறாள் - ஆசி ) பிதாவாகிய தேவனே, இதன் அர்த்தத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நீர் வேதாகமத்தில் ''மூன்று முறை“ என்று கூறியிருக்கிறீர், இது மூன்றாம் முறை. இங்குள்ள அர்த்தம் உரைக்கும் வரம் யாருக்காவது இதன் அர்த்தத்தை தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இதை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். கிறிஸ்துவின் நாமத்தில். (ஒரு சகோதரன் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் - ஆசி) ஆமென். நன்றி, கர்த்தாவே. அது தீர்க்கதரிசனம், அர்த்தம் உரைக்கப்பட்டதல்ல. பாருங்கள், ஸ்திரீயைக் காட்டிலும் இவர் அதிகமாக தீர்க்கதரிசனம் உரைத்தார். அதற்கு அர்த்தம் உரைத்தல் வரப்போகின்றது. பாருங்கள், அந்த மனிதன் தீர்க்கதரிசன வரம் பெற்றவர். (ஒரு சகோதரன் அர்த்தம் உரைக்கிறார் - ஆசி) ஆமென். நன்றி, கர்த்தாவே எனக்கு நேராக பின்னால்... (சபையிலுள்ள ஒரு சகோதரி ஜெபிக்கிறாள் - ஆசி) தேவனே, அவள் கூக்குரலிட்ட காரியத்துக்கு அவளுக்கு ஆசீர்வாதங்களை அருளுவீராக. இப்பொழுது நீங்கள் உண்மையில் பயபக்தியாயிருந்து, அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்பொழுது பரிசுத்த ஆவியின் மூலமாய், நான் பிரசங்கித்த வார்த்தையைக் கொண்டு வர நான் முயன்று கொண்டிருக்கிறேன். அது நிறைவேறும் என்று அவர் சாட்சி பகர்ந்துள்ளார். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 87எனக்கு பின்னால் உட்கார்ந்திருக்கும் ஒரு ஸ்திரீ எனக்கு முன்னால் நிற்பதைக் காண்கிறேன். அவள் இருதய வியாதியால் அவதியுறுகிறாள். அவளுக்கு ஒவ்வாமை (Allergy) 'அலர்ஜிகள்' வேறு தொல்லைப்படுத்துகின்றன. அவள் எனக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் இன்னும் எழுந்து நிற்காமல் இருந்தால்... கூட்டத்திலுள்ளோர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நான் என் கண்களை மூடிக் கொண்டிருக்கிறேன். அவளுக்கு அன்பார்ந்த ஒருவர் பேரிலும் அவள் கவலையுற்றிருக்கிறாள். அது அவளுக்கு சற்று அப்பால் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவளுடைய கணவர், அவருக்கு திமிர்வாதம் உள்ளது. அவர் கையில் ஒரு பிரம்பு உள்ளது. அந்த ஸ்திரீயின் பெயர் திருமதி பிரம்லி. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. எழுந்து நின்று, நீ எதற்காக ஜெபித்தாயோ அதை பெற்றுக் கொள். நீ கேட்டுக் கொண்டதை பெற்றுக் கொள்வாய். எழுந்து நில், அவள் எழுந்து நிற்கிறாளா? (சபையோர் ''ஆம்'' என்கின்றனர் - ஆசி). தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் அவளை நான் கண்டதே கிடையாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்தானே? அங்கு... (அந்த ஸ்திரீ ''ஆம்'' என்கிறாள் - ஆசி). அவர்களைக் கேட்டுப் பாருங்கள். அது உண்மையாவென்று அவர்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள். அது சோதோம் அழிவதற்கு முன்பு அங்கிருந்த அதே தேவன் இல்லையென்றால், அது என்னவென்று எனக்குத் தெரியாது. 88இந்த பாகத்திலுள்ள வேறு யாராகிலும் கர்த்தராகிய இயேசுவை இப்பொழுது முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். ஒரு ஸ்திரீ நேராக என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஆழ்ந்த விருப்பம் உள்ளது. அவளுக்கு ஒன்றைக் கொடுக்க வேண்டுமென்று அவள் தேவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டிருப்பது ஒரு குழந்தைக்காக. அவள் எனக்கு நேராக பின்னால் இருக்கிறாள். திருமதி. ஹோம்ஸ், எழுந்து நின்று கர்த்தராகிய தேவனை விசுவாசி. உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசித்தால், நீ ஜெபித்துக் கொண்டிருக்கும் குழந்தை உனக்குக் கிடைக்கும். ஒரு ஸ்திரீ தரிசனத்தில் காணப்படுகிறாள். அவள் ஊனமுற்றிருக்கிறாள். அவள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். அவள் எனக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் நாட்டின் இந்த பாகத்தை சேர்ந்தவள் அல்ல. அவள் சாக்கிரமென்டோவிலிருந்து, வடக்கு சாக்கிரமென்டோவிலிருந்து வருகிறாள், அவள் மிகவும் வியாதியாயிருந்தாள். மருத்துவர்கள் அவளுக்கு உதவி செய்ய இயலவில்லை. அவள் மருத்துவமனையில் இருந்தாள். அவளுக்கு பல அறுவை சிகிச்சைகள் நடந்தன. அவளுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது. அவளுடைய எலும்புகளிலும் கோளாறு உள்ளது. அவளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு, அது பல சிக்கல்களை விளைவித்தது, அவள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். அங்குள்ள திருமதி. பீலர், உன் கையையுயர்த்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து சுகம் பெறுவாயாக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 89நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் இன்னமும் ஜீவித்து அரசாளுகிறார். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால்! இங்கு ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவள் இங்கு உட்கார்ந்திருப்பதைக் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் பெருங்குடல் கோளாறினால் அவதியுறுகிறாள். அவளை எனக்குத் தெரியாது. நீ யாரென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா? திருமதி. பெர்க்லண்ட். உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் சுகமடைவாய், விசுவாசி. இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டு விபத்துக்குள்ளான தன் நண்பருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீ கேட்டதைப் பெற்றுக் கொள்வாய். தலைவலியால் அவதியுறும் ஒரு ஸ்திரீ அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அப்படியானால் நீ சுகமடைவாய். சந்தேகப்படாதே. விசுவாசி. அவர் அதே தேவனாய் இராமல் போனால், அவர் யாரென்று எனக்குத் தெரியாது. நீ அதை ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பாயானால், உனக்கு சுகமளிக்க அவர் இருக்கிறார். 90(ஒரு சகோதரி வேறொரு பாஷையில் பேசுகிறாள். அதற்கு சகோதரன் அர்த்தம் உரைக்கிறார்-ஆசி). ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் கர்த்தருடைய சமுகத்தில் இருக்கின்றீர்கள் என்று உணர முடியவில்லையா? அதைச் செய்யுங்கள். ஆவியானவர், “என் ஜனங்களே, என்னிடத்தில் வாருங்கள், என்னை விசுவாசியுங்கள்'' என்று பேசின பிறகு, இப்பொழுது நாம் உடனடியாக என்ன செய்ய வேண்டுமென்றால், நாம் பீட அழைப்புக்காக எழுந்து நின்று, கிறிஸ்துவை அறியாதவர்கள் முன் வந்து பீடத்தை சுற்றி நின்று, அவரை தங்கள் இரட்கராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறேன். நீங்கள் இதுவரை பரிசுத்த ஆவியைப் பெறமலிருந்தால், அதைப் பெற்றுக் கொள்ள நீங்களும் வாருங்கள். ஏனெனில் அதுதான் சம்பவிக்க போகின்றது. பாடலுக்காக சுருதியை நாம் பெறப் போகும் இந்நேரத்தில் நீங்கள் முன்னால் வரமாட்டீர்களா? யாராகிலும் ஒருவர் பாடல் தலைவராகப் பாடலை நடத்துவார்கள். பரிசுத்த ஆவி பேசிக் கொண்டிருக்கிறார். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. அது உண்மை. வேறு யாராகிலும் எழுந்து வந்து இந்த ஸ்திரீயுடன் நில்லுங்கள். நீங்கள் முன்னால் வாருங்கள்... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. அவருடைய சமுகத்தில் வேதாகமம், வார்த்தை, உறுதிப்படுதல், வரங்கள் இவையனைத்துமே கிரியை செய்து கொண்டிருக்கும் போது. இது இப்பொழுது மிகவும் அற்புதமாய் உள்ளது அல்லவா? நேராக பீடத்தண்டை வாருங்கள். மாடியின் முன்பாகத்திலிருந்து கீழே இறங்கி வாருங்கள். தேவனற்றவர்களாய், பரிசுத்த ஆவியினால் நிறையப்படாமல் இருப்பவர்களே, நாம் இப்பொழுது பாடும் போது வாருங்கள். இயேசு இந்த வழியாய்க் கடந்து போகிறார் இந்த வழியாய், இன்று இயேசு இந்த வழியாய்க் கடந்து போகிறார் இன்று இந்த வழியாய்க் கடந்து போகிறார் இயேசு இந்த வழியாய்க் கடந்து போகிறார் (அவர் கடந்து போய், “அவருடைய ஆவி அசைவாடி 'வா'' என்று சொல்லும் போது வரமாட்டாயா?)... இன்று இயேசு இந்த வழியாய்க் கடந்து போகிறார் இன்று இந்த வழியாய்க அவர் கடந்து போகிறார் 91அவர் கடந்து போகும் போது வரமாட்டாயா? அவர் உங்கள் மத்தியில் என்ன செய்து கொண்டு, அவர் மாறாதவர் என்பதைக் காண்பிப்பதை பாருங்கள். அவரை அறியாத ஒவ்வொரு ஆத்துமாவும், மறுபடியும் பிறவாத அனைவரும் எழுந்து வாருங்கள். அவரைத் தேட பரிசுத்த ஆவி உங்களை அறிந்திருக்கிறார்...“ அவர் கடந்து போகிறார்''. இயேக இந்த வழியாய்க் கடந்து போகிறார் இந்த வழியாய், இன்று ஓ, இயேசு இந்த வழியாய்க் கடந்து போகிறார் இன்று இந்த வழியாய்க்அவர் கடந்து போகிறார் தேவனை அறியாத ஒவ்வொரு ஆத்துமாவும், உங்கள் நிலைமையைக் குறித்து நிச்சயமாய் அறிந்திராத ஒவ்வொருவரும் இப்பொழுது வரக்கடவர்கள். வேண்டாம்... சகோதரனே, சகோதரியே, அறிவினால் விளைந்த கருத்தை கொண்டிருக்க வேண்டாம். அப்படி செய்ய வேண்டாம். நீங்கள் எல்லாவிதமான உணர்ச்சிகளையும் கொண்டிருந்திருக்கக் கூடும். உங்கள் கையிலும், முகத்திலும் இரத்தம் தோன்றியிருக்கக் கூடும். உங்களுக்கு நடுக்கம் போன்றவை உண்டாகியிருக்கக் கூடும். அதெல்லாம் சரிதான். நீங்கள் அந்நிய பாஷைகள் பேசியிருக்கலாம், ஆவியில் நடனமாடியிருக்கலாம், இருப்பினும் இழந்து போன நிலையிலிருக்கக் கூடும். அது உண்மை. அது உங்களுக்குள்ளே பிறந்துள்ள ஜீவனாயிருக்க வேண்டும். அது இந்த வார்த்தையை எடுத்து அதை மறுபடியம் ஜீவிக்கச் செய்யவேண்டும். பாருங்கள், கிறிஸ்துவே வார்த்தை. நீங்கள் வார்த்தைக்குள் நகர்ந்து சென்று அதை விசுவாசிக்க உங்களுக்கு விசுவாசம் இல்லை, நீங்கள் இப்பொழுது வரமாட்டீர்களா? 92தேவனுடைய சபை; சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கி, மரங்களிலுள்ள பழங்கள் பழுக்கும் போது; தேவன் அந்த மரத்தை திரும்ப அளிப்பதாக வாக்களித்துள்ளார் - அதே பெந்தெகொஸ்தே மரம், அதே விதமான விசுவாசம், அவர்கள் பெற்றிருந்த எல்லாமே. அந்த மரம் திரும்ப அளிக்கப்படும். அது ஸ்தாபனமின்றி வேறெதுவுமின்றி இருக்கும். அது பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் வந்து, அது முன்பு செய்த விதமாகவே வேதாகமத்தை போதிக்கும். கடைசி நாட்களில் ஒருவர் வந்து அந்த விசுவாசத்தை திரும்ப அளிப்பார் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இன்றிரவு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறாரென்று நான் விசுவாசிக்கிறேன். நாம் மறுபடியும் பாடும் போது, இப்பொழுது வாருங்கள். அப்பொழுது நாம் அதை அடைந்துவிட்டோம் என்னும் நிச்சயத்தை உடையவர்களாயிருப்போம். 93இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஆவி... பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள் அந்நிய பாஷைகள் பேசுதல், அவைகளுக்கு அர்த்தம் உரைத்தல் ஆகிய வரங்களில் நிச்சயமாக நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள். அவர் இங்கு நடத்தினதை உங்களால் விசுவாசிக்க முடியாமல் போனால், உங்களை பீடத்தண்டை அழைத்த அந்நிய பாஷைகளையும் அவைகளுக்கு உரைக்கப்பட்ட அர்த்தத்தை யாகிலும் நம்புங்கள். எல்லோரும் வரக் கடவர்கள். நீங்கள் அது கிரியை செய்வதை, இது கிரியை செய்வதைக் கண்டால், அது தேவன் கிரியை செய்வதாகும். அது தேவன் வார்த்தை அதை உறுதிப்படுத்தி, அது சத்தியம் என்று உரைக்கிறது. வாருங்கள். இன்னும் ஒரு முறை பாடுவோம். அப்பொழுது நீங்கள் வாருங்கள். இயேசு இந்த வழியாய்க் கடந்து போகிறார் இன்று, இன்று இயேசு இந்த வழியாய்க் கடந்து போகிறார் இன்று இந்த வழியாய் அவர் கடந்து போகிறார். 94இப்பொழுது, தேவனை விசுவாசிப்போர், உண்மையான பரிசுத்தவான்களான போதகர்கள், கிறிஸ்துவின் ஊழியக்காரர் அனைவரும், நாம் மறுபடியுமாக இந்தப் பாடலைப் பாடும் போது எழுந்து வாருங்கள். நீங்கள் பீடத்தனருகில் வந்து, இங்குள்ளவர்களை சூழ நில்லுங்கள். நாம் அவர்களுடன் ஒருமித்து ஜெபம் செய்வோம். வாருங்கள். நீங்கள் அருகில் வரமாட்டீர்களா? அவர்கள் ஒவ்வொருவரையும் என் கையை நீட்டி தொட முடியவில்லை. நீங்கள் வரவேண்டுமென்று விரும்புகிறேன். ஊழியக்கார சகோதரராகிய உங்களில் சிலர் அவர்கள் மத்தியில் செல்லுங்கள். அப்பொழுது நீங்கள் அவர்களைத் தொட்டு, அவர்கள் மேல் கைகளை வைக்க ஏதுவாயிருக்கும். சரி, தேவனை அறிந்துள்ள நீங்கள் வந்து இவர்களைச் சூழ நில்லுங்கள் - ஸ்திரீகள் ஸ்திரீகளுடனும், மனிதர் மனிதருடனும். இங்கு நகர்ந்து வாருங்கள். அது தேவனுடைய ஒழுங்காயுள்ளது. ஜனங்களே, இப்பொழுது அங்கு நகர்ந்து வாருங்கள், அப்படித்தான், உங்களில் தேவ பக்தியுள்ள தாய்மார்கள் சிலரும், தேவபக்தியுள்ள சகோதரர்கள் சிலரும் இங்கு வந்து இப்பொழுது சூழ நில்லுங்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கென உங்கள் கைகளை அவர்கள் மேல் வைக்கமுடியும். சரி. அப்படிதான். அப்படித்தான். 95இப்பொழுது, நீங்கள் ஏன் வந்தீர்கள்? நீங்கள் விசுவாசிப்பதினால். தேவன் நமது மத்தியில் இருக்கிறாரென்று நீங்கள் உறுதிகொண்டுவிட்டீர்கள்? அவர் இன்றிரவு இங்கிருக்கிறார். அவர் இங்கிருந்து கொண்டு மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து கொண்டிருக்கிறார். நெருங்கி வாருங்கள், ஒவ்வொருவரும். அப்பொழுது ஜனங்களுக்கு அதிக இடம் இருக்கும். நெருங்கி வாருங்கள். உட் பாதைகளின் வழியாக இன்னும் ஜனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர், பாருங்கள். நெருங்கி வாருங்கள். தங்கள் ஆத்தும இரட்சிப்புக்காக இங்கு நின்று கொண்டிருக்கும் ஜனங்களின் மேல் கூட்டத்திலுள்ள எத்தனை பேர் கவலை கொண்டிருக்கிறீர்கள், உங்கள் கைகளையுயர்த்துங்கள். சரி, நாமெல்லாரும் இப்பொழுது நமது கரங்களையுயர்த்தி, ஜெபத்தில் இதைக் கேட்போம். 96எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் பிரசன்னமாயிருந்து, தமது வார்த்தையை புதிதாக ஜீவிக்கச் செய்யும் இந்நேரத்தில், இந்த கூட்டத்தினரை இன்றிரவு உம்மிடம் கொண்டு வருகிறோம். கர்த்தாவே, ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும். ஆவியின் வல்லமையோடு வாரும் கர்த்தாவே, இதை அருளும். தேவனுடைய வல்லமையினால் அசைவாடி, இந்த ஆத்துமாக்களை ஆட்கொள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவைகளை உமது மகிமைக்காக உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்.